புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்படாத உறுப்பினர்களை கைது செய்து, சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. இது போர்க்குற்ற விசாரணைகளில் ஈடுபட்டோரை தப்பிக்க வைப்பதற்காகவும் மற்றும் விசாரணையை திசை திருப்பவும் எடுக்கப்பட்ட முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், புனர்வாழ்வளிக்கப்படாமல் வெளிநாடுகளில் வாழும் போராளிகள் உள்ளிட்டவர்களை கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை ஜாதிக ஹெல உறுமய மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியது. இது தொடர்பில கருத்துக்கூறுகையிலேயே கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இராணுவத்தினர் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளும் போது, அதிலிருந்து அவர்கள் தப்புவதற்கு விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்துகின்றனர். முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, கொடூரமான சித்திரவதை செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும் உள்ளனர். அதனைவிட 12 ஆயிரம் உறுப்பினர்கள் 6 மாத காலம் தொடக்கம் 5 வருடங்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் விசாரணைக்கு உட்;படுத்த முடியாது. அதற்கு சட்டரீதியான ஏற்பாடுகளும் இல்லை. இன்றைய நிலையில் இலங்கை இராணுவம் மாத்திரமே தண்டிக்கப்படாமல் இருக்கின்றது. அவர்களின குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என வலுவான நிலைப்பாடு இருக்கின்றது. அதிலிருந்து தப்புவதற்காகவும் விசாரணை திருப்புவதற்கும் இவ்வாறான கதைகளை அவிழ்த்து விட்டு, இராணுவத்தினரை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகளுக்கு தமிழரசுக் கட்சி குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரனும் துணைபோவது கவலைக்குரியதாகவுள்ளது. நாங்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும் என சுமந்திரன் ஐ.நாவில் வைத்து தெரிவித்துள்ளார். இது இராணுவத்தினரை தப்பிக்க வைக்கும் செயற்பாடு ஆகும்' என அவர் மேலும் கூறியுள்ளார். |
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகளையும் கைது செய்ய முயற்சி! - செ.கஜேந்திரன்
Add Comments