இந்தியாவுடன் இணைந்து சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளமை ஆபத்தான விடயம் என்று மின்சாரசபை தொழிற்சங்கமொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கமே குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பில் அதன் தலைவர் அதுல வன்னியாரச்சி தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையம் இந்திய- இலங்கை கூட்டு நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக செய்து கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு ஒப்பந்தம் இலங்கைக்கு மிகவும் பாதகமான வகையில் அமைந்துள்ளது. இலங்கைக்கு பாதகமான நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் இணைந்து அமைக்கப்படவுள்ள அனல் மின்நிலையத்துக்குப் பதிலாக, ஜப்பானுடன் இணைந்து அனல் மின் நிலையம் அமைப்பது கூடுதல் பயன்தரக் கூடியது என்றும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. |