நாட்டில் இடம்பெறுகின்ற மற்றும் தமக்கு தேவையான தகவல்களை சுதந்திரமாக அறிந்துக் கொள்கின்றமை நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.
நாட்டில் நிலை கொண்டிருந்த யுத்தம், தகவலை அறியும் சந்தர்ப்பத்தை இழக்கச் செய்திருந்தது. யுத்த சூழ்நிலையை காரணம் காட்டி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற போர்வையில் தகவலை அறிந்துக் கொள்ள கடந்த கால அரசாங்கங்கள் இடமளிக்கவில்லை. இந்த சூழலில் ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக திகழ்ந்த விடயங்களில் தகவலறியும் உரிமையும் ஒன்றாகும்.
தகவலறியும் உரிமை அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இணைந்த தேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதன்பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தலைமையிலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, தகவலறியும் சட்டமூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
பல நாடுகளிலும் காணப்படுகின்ற தகவலறியும் சட்டம் தொடர்பில் ஆராய்ந்த குறித்த குழு, தகவலறியும் சட்டமூலத்தை மிக வேகமாக தயாரித்திருந்தது.
பிற நாடுகளில் காணப்படுகின்ற தகவலறியும் சட்டத்தை பின்பற்றியே, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தலைமையிலான குழு தகவலறியும் சட்டமூலத்தை தயாரித்துள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட தகவலறியும் உரிமைக்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கடந்த வாரம் வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் (03.12.2015) தெரிவித்திருந்தார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் தகவல் அறியும் சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன அன்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இந்த சட்டமூலம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தகவலறியும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சற்று நோக்கினால், குறித்த சட்டம் அமுல்படுத்தப்படும் பட்சத்தில் அதனூடாக மக்கள் எவ்வாறு தகவலை அறிந்துக் கொள்ள முடியும்?
01. தனிநபர் தொடர்பான தகவல்களை அறிந்துக் கொள்ள முடியாது. (குறித்த நபர் விரும்பினால் அதனை வழங்க முடியும்)
02. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான சந்தர்ப்பங்களில் தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
03. சர்வதேச ஒப்பந்தங்களின் இரகசிய விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
04. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
05. வர்த்தக மற்றும் வணிக இரகசிய தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
06. தனிநபரின் மருத்துவ அறிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்காது இருக்க முடியும். (குறித்த நபர் விரும்பினால் அதனை வழங்க முடியும்)
07. தொழில் வழங்குனர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விடயங்களை, வெளியிட அனுமதி வழங்காத பட்சத்தில் அது தொடர்பான தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
08. குற்றவாளிகளை இனம்காண முடியாமல் போகும் என கருதப்படும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
09. சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களின் இரகசிய தன்மையை பேணுவதற்காக அந்த தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
10. நீதிமன்றத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
11. பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படும் என்று கருதும் பட்சத்தில் அது தொடர்பான தகவல்களை வழங்காது இருக்க முடியும்.
12. சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தாலும், அந்த பேச்சுவார்த்தை நிறைவடையவில்லை என்றால் அது குறித்த தகவல்களையும் வெளியிட முடியாது.
13. மக்களுக்கு தேவையான தகவல்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் அதிகமாக இருக்கும் என கருதப்படும் பட்சத்தில் அது குறித்த தகவல்களையும் அறிந்துக் கொள்ள முடியாது.
மேல் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் தொடர்பான தகவல்களை 10 வருடங்களின் பின்னரே அறிந்துக் கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவிக்கின்றது.
அதேபோன்று இந்த சட்டத்தை பின்பற்றுவதில் அதிக பொறுப்பு அமைச்சுக்கள் வசமே காணப்படுவதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவிக்கின்றார்.
சுமார் 12 வருடங்களுக்கு தேவையான தகவல்களை களஞ்சியப்படுத்த வேண்டிய பொறுப்பு அமைச்சுக்கள் வசமே காணப்படுகின்றது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தகவலை அறிந்துக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதாக கூறிய அரசாங்கம், அந்த பொறுப்பிலிருந்து விடுபட்டுள்ளமை இந்த காரணங்களின் ஊடாக தெளிவாகின்றது.
தகவல்களை அறிந்துக் கொள்வதற்கான முயற்சிகளை ஒரு நபர் எடுக்கும் பட்சத்தில், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற, கடந்த அரசாங்கங்களின் அதே போர்வையில் தகவலை அறிய விடாது தடுக்கவும் இந்த சட்டத்தின் ஊடாக இயலுமை உத்தியோகபூர்வமாக வழங்கப்படுகின்றது.
முக்கியமான விடயம் என்னவென்றால், நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய திட்டங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துக் கொள்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அது குறித்து விவாதிக்க மாத்திரமே இந்த சட்டத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம், தகவலறியும் ஆணைக்குழுவொன்றையும் ஸ்தாபிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவரேனும், தகவலறிவதற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் இது குறித்து மேன்முறையீடு செய்ய முடியும் என்கின்றது அரசாங்கம்.
அனைத்து அரச நிறுவனங்களிலும், தகவலை வழங்கும் அதிகாரியொருவர் இருப்பார். அவர் தகவலை வழங்க மறுக்கும் பட்சத்தில், அது தொடர்பில் மேன்முறையீடு செய்ய அதே நிறுவனத்தில் அதிகாரியொருவர் இருப்பார்.
அவரும் அதற்கான பதிலை சரிவர தர மறுத்தால், அது குறித்து, தகவலறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
தகவலறியும் ஆணைக்குழுவிலும் தமக்கான பதில் கிடைக்காத பட்சத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவதற்கான சந்தர்ப்பம் இந்த சட்டத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
இவ்வாறு தகவலை அறிந்துக் கொள்வதற்காக தொடரும் இந்த நபரின் பயணத்தின் இறுதி பதில் மேல் குறிப்பிடப்பட்ட ஒரு விடயமாக அமைந்திருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே!
இந்த செயற்பாடுகளின் ஊடாக தகவலை அறிந்துக் கொள்ள உத்தியோகபூர்வ தடை விதிக்கப்பட்டுள்ளது?