அரசியல் கைதிகள் தொடர்பில் இதுவரையிலும் விடுதலையோ அல்லது புனர்வாழ்வோ இல்லை. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடவிருக்கும் தேசிய அரசாங்கம் இது வரையிலும் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அண்மையில் ஜனாதிபதி நிகழ்த்திய விஷேட உரையில் பிரபாகரன் போன்றவர்கள் உருவாவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளே காரணம் என தெரிவித்திருந்தார். அத்துடன் தன்னை கொலை செய்ய முயற்சித்தவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற நிலையில், அரசியல் கைதிகள் விடயத்தில் அவர் இந்த அதிகாரத்தினை பயன்படுத்தவில்லை என அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளுக்கு விடுதலையும் இல்லை, புனர்வாழ்வும் இல்லை! - அருட்தந்தை சக்திவேல் விசனம்
Related Post:
Add Comments