புதிய அரசியல் யாப்புக்கான விவாதத்தின் போது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன், அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய தீர்வுவொன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்காவை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுதான் சிறந்தது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
நீண்ட உரையாற்றிய சம்பந்தன், புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என தனது உரையில் வலியுறுத்தவில்லை.
உள்ளக சுயநிர்ணய உரிமை என்றோ அல்லது தமிழர்களின் இறமையையும் வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற எந்தவொரு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் சம்பந்தன் தனது உரையில் வெளிப்படுத்தவில்லை.