யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையரும் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பொங்கலும், பூஜையும் இடம்பெறுகிறது. இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் முன்னார் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்று காலை 10.30 மணியளவில் ஆலயத்தில் நடைபெறவுள்ள இந்த விசேட நிகழ்வினைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பொங்கல் விழா நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கேசாப், பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோனிஸ், ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வரவேற்புரை ஆற்றவுள்ளார். இந்து கலாசார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வையர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர்.
கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
தைப்பொங்கல் விழாவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா உட்பட கூட்டமைப்பு எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளனர். இதற்கான அழைப்புக்களும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் வெளிநாடொன்றில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.
தேசிய பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று காலை பலாலி விமான நிலையத்தை சென்றடையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது.
மக்களின் மீள்குடியேற்றம், காணிகளை மீளக்கையளித்தல், தொடர்பான விடயங்கள் குறித்து முப்படைத் தளபதிகளுடன் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.