ரணில் - ஹியுகோ சுவயர் முன்னிலையில் அரசாங்கத்தை கடுமையாக சாடினார் விக்கி - MY3 கலந்துகொள்ளவில்லை

ரணில் - ஹியுகோ சுவயர் முன்னிலையில் அரசாங்கத்தை கடுமையாக சாடினார் விக்கி - MY3 கலந்துகொள்ளவில்லை:

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசியபொங்கல் விழாவில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சிவிவிக்னேஸ்வரன் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க முன்னிலையில் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
 
பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் ஹியுகோ சுவயரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றி முதலமைச்சர் கடந்தவருட தேர்தலிற்கு பின்னர் உருவாகியுள்ள மாற்றங்களை வடபகுதி தமிழர்கள் அங்கீகரித்தாலும் அவர்கள் இன்னமும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
வடபகுதியில் பெருமளவு இராணுவபிரசன்னம் காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர் இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கு தவறியதற்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காததற்காகவும் அரசாங்கத்தை சாடியுள்ளார்.வடக்கில்150000 படையினர் இன்னமும் காணப்படுகின்றனர், இது வன்முறைகளிற்கு வித்திடுகின்றது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் வடமாணகசபையின் நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 இதே வேளை இன்றைய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இறுதி நேரத்தில் கலந்துகொள்ளவில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila