நம்மை நாமே ஆளுவோம் தீர்வுத் திட்டத்தில் வலியுறுத்து


வடக்கு கிழக்கு இணைந்த சுய ஆட்சியுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்கள் பேரவை தனது அரசியல் தீர்வு திட்ட முன்வரைபில் கோரியுள்ளது. சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் மக்கள் தமது தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடாத்தப்பாடல் வேண்டும் என்பதனையும் பேரவை தனது முன்வரைபில் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்தாய்வு ஒன்றினை நடாத்துவதற்கு உதவும் வகையில், அரசியல் தீர்வு தொடர்பிலான முக்கிய வரையறைகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றினை தயாரிப்பதற்கு, சிரேஸ்ட சட்டத்தரணி வி.புவிதரன் தலைமையில் ஒரு உப குழு ஒன்றினை அமைத்து தீர்வு திட்ட முன்வரைபு ஒன்றினை தயாரித்திருந்தது.
இத்தீர்வு திட்ட முன்வரைபு நேற்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. இருபத்தியொரு பக்கங்களை கொண்டமைந்துள்ள அந்த வரைபில், இருபத்தி நான்கு பிரதான தலைப்புக்களின் கீழ் தமிழ் மக்களுக்கான உரிமைகள், அபிலாசைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அரசியல் ஏற்பாடுகளை செய்வதற்கு முன் அரசியல் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தேவைப்பாட்டிற்கு விளக்கமளிக்த்தலுடன் ஆரம்பமாகும் தீர்வு திட்ட முன்வரைபு, அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கான வரைபு முன்மொழிவுகளை பின்வரும் தலைப்புக்களில் கூறுகின்றது.
இலங்கை அரசின் தன்மை, இறைமை, அரசியலமைப்பின் மீயுயர்வுத் தன்மை, மொழி மதம் பிரஜாவுரிமை மற்றும் அடிப்படை உதவிகள், ஆட்சி முறைமை, என்ற தலைப்புக்களில் வலியுறுத்தி, இதில் மத்திய மட்டத்திலான பகிரப்பட்ட ஆட்சியில் இரண்டாவது அவை, மாநில ஆளுநர், மத்தியினதும் மாநிலத்தினதும் அதிகாரங்கள், காணிகள், உள்ளூராட்சி மன்றங்கள், போலிஸ் சட்டம் மற்றும் ஒழுங்கு, வெளியுறவுக்கொள்கை, பொதுச்சேவை, ஆட்சேர்ப்புக்கொள்கை, கல்வி, அரசிறை சமஸ்டி,
மத்தி மாநிலத்திற்கு இடையிலான பிணக்குகளை தீர்த்தல் எனும் தலைப்பில் அரசியலமைப்பு நீதிமன்றம், நீதித்துறை, நல்லாட்சி மாநில சபை, மாநில சட்டமா அதிபதி, அவசர கால அதிகாரங்கள், மத்தி மாநிலங்களிற்கு இடையிலான ஒத்துழைப்பு, அரசியலமைப்பு திருத்தங்கள், என்ற தலைப்புக்களில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
பேரவை தனது தீர்வு திட்ட முன்வரைபில் வலியுறுத்தியுள்ள ஆட்சி முறைமையில், இலங்கை ஓர் சமஸ்டி குடியரசாக இருக்கும். இதில் இரண்டு மட்டத்திலான அரசாங்கம் இருக்கும் [மத்தி மற்றும் மாநிலம்] சமஸ்டியின் கூறுகளாக மாநிலங்கள் இருக்கும். அத்தகைய மாநிலங்களில் ஒன்றாக தற்போதைய 1978 ஆண்டு அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கொண்ட வடக்கு கிழக்கு மாநிலம் அமையப்பெறும்.
மத்திய அரசு பாராளுமன்றில் நிறைவேற்று அதிகார முறைமையை கொண்டதான வெஸ்ட்மினிஸ்டரர் முறைமையிலான ஆட்சி முறைமையில் இருத்தல் வேண்டும். என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை விட காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட ஐம்பத்து நான்கு அதிகாரங்களை மாநில அதிகாரங்களாக வரைபு கோரியுள்ளது.
1.காணி2. சுகாதாரமும் சுதேச மருத்துவமும்3. உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக கல்வியும் கல்விச் சேவைகளும்4. கமத்தொழிலும் கமநலசேவைகளும்5. நீர்ப்பாசனம்6. விலங்கு வேளாண்மை7. கண்டமேடு மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்ட வரலாற்று நீர்ப்பரப்புகள் மற்றும் ஆள்புல நீர்ப்பரப்புக்கள் உள்ளடங்கலான கரையோர வலயங்களுடன் தொடர்புபட்ட மீன்பிடித் தொழில், கனிப்பொருள்கள், சுரங்கங்கள் உள்ளடங்கலான பொருளாதார வளங்கள்.
8. மாநிலத்திற்குள்ளான வனங்கள், சரணாலயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு9.கைத்தொழில்களும் கைத்தொழில் அபிவிருத்தியும்10. எரிபொருள், மின்சாரம் மற்றும் மின்வலு வழங்கல்11. சுரங்கங்களும் கனியவளங்களும் குவாரிகளும்12. போக்குவரத்து13. மாநில கணக்கெடுப்பும் புள்ளி விபரவியலும்14. விமான நிலையங்களும் துறைமுகங்களும் இறங்குதுறைகளும்15. ஆறுகளும் நீர்நிலைகளும்16. வீதிகளும் பெருந்தெருக்களும்
17. வீடமைப்பும் நிர்மாணத்துறையும்18. நகர திட்டமிடலும் அபிவிருத்தியும்19. கிராமிய அபிவிருத்தி20. உள்ளுராட்சி மன்றங்கள்21. கூட்டுறவுகள்22. மாநிலத்திற்குள்ளான உணவு விநியோகமும் பகிர்ந்தளிப்பும்23. சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு24. பொது ஆற்றுகைகள் உள்ளடங்கலாக கலாச்சாரச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல், 25. தொலைக்காட்சி உள்ளடங்கலான ஒலிபரப்பும் ஊடகமும்
26. நிவாரணங்கள், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம்27. சமூகப் பாதுகாப்பு28. காவல்துறையும் சட்டமும் ஒழுங்கும். (மீன்பிடி உரித்துகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கும் கரையோர வளங்களை பாதுகாக்கும் பொருட்டும் காவல்துறை ஒரு ~கரையோரப் பாதுகாப்பு| பிரிவொன்றை ஸ்தாபிக்க முடியும்)
29. சீர்திருத்தும் நிலையங்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை நிறுவனங்களின் நிர்வாகம்30. மாநில பொதுச் சேவைகள்31. விளையாட்டுத் துறை32. மாநிலத்திற்குள்ளான கூட்டிணைக்கப்படாத சங்கங்களையும் மன்றங்களையும் ஒழுங்குபடுத்தல்
33. மாநிலத்தின் கடன்34. உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன் மற்றும் உதவி பெறுதல் (சர்வதேச கடன் பெறுதலின் போது குறித்த வரையறையை மீறும் பட்சத்தில் மத்தியின் ஒருங்கியைவு தேவைப்படும்)35. மாநிலத்துக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு, சர்வதேச நன்கொடைகள், அபிவிருத்திக்கான உதவிகளை ஒழுங்குபடுத்தலும் ஊக்குவித்தலும்.
36. மாநில நிதி மற்றும் கடன் நிறுவனங்கள்37. மதுவரி தீர்வைகள்38. பிராந்தியத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள் மீதான விற்பனைப் புரள்வு வரிகள்ஃபெறுமதி சேர்க்கப்பட்ட வரிகள்.39. தேசிய லொத்தர்கள் தவிர்ந்த பந்தய வரிகளும், பரிசுப்போட்டிகளும், லொத்தர்களும் மீதானவரிகள்.40. மோட்டார் வாகன உரிமம் மற்றும் கட்டணங்கள்.
41. மோட்டார் வாகன மற்றும் ஆதன விற்பனைகள் மீதான முத்திரைக் கட்டணம்.42. நீதிமன்றங்களினால் அறவிடப்படும் தண்டப் பணங்கள்43. நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மீதான முத்திரைக் கட்டணம் உள்ளடங்கலாக நீதிமன்ற கட்டணங்கள்.44. இறைவரியினை மதிப்பிடுதல், அறவிடுதல் உள்ளடங்கலான காணி வரி அறவீடு மற்றும் வரி அறவிடும்; நோக்கங்களுக்காக காணி பதிவேடுகளை பேணுதலும்.
45. கனிப்பொருள் உரிமைகள் மீதானவரிகள்.46. மாநில கணக்காய்வு47. மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் சட்டங்களை ஆக்குதல்.48. மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தண்டப்பணம்.49. மாநில மட்டத்திலான திட்டமிடல்50. மாநிலத்துக்கான சட்ட சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்51. தொல்பொருள் மற்றும் பாரம்பரிய அமைவிடங்கள், நூதனசாலைகள், சுவடிகள்
52. மாநிலத்துக்குள்ளான நிர்வாகம்53. மாநிலத்துக்குள்ளான நீதிநிர்வாகம்54. மாநில திரட்டு நிதியம்.ஆகியவற்றை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்குரிய அதிகாரங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர மத்திய அரசிற்குரிய அதிகாரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள முப்பத்தி எழு அதிகாரங்கள் தவிர ஏனைய அனைத்தும் மாநிலத்திற்கான அதிகாரங்கள் என வரையறை செய்யப்படுள்ளது. இவற்றோடு வடகிழக்கு மாநில ஆட்சி நடைமுறைக்கான சில முன்மொழிவுகளும் தீர்வு திட்ட முன்வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila