
இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பான தீர்மானம் கட்சி ரீதியாக ஒன்றுகூடி மேற்கொள்ளப்பட்டது அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடலில் நாளை மறுதினம் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு கூறினார்.அத்துடன் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களாக காணப்படும் அரசியல் கைதிகளின் விடுதலை, சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றது.
இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரை இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் மக்களினால் அனுஷ்டிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.