சமஸ்டி தேடும் சுற்றுலாவும் (சு)தந்திர தேசிய கீதமும் பனங்காட்டான்

ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சமஸ்டிக் கட்சியின் வாரிசுகளாக வந்தவர்கள் இப்போதுதான் சம~;டி பற்றி அறிய முயற்சிப்பதென்பது விசித்திரமானது. அதிலும், சமஸ்டி ஆட்சிமுறை இல்லாத ஸ்கொட்லாந்தில் அதுபற்றி அறிய விரும்பிச் சென்றது ஒருவகைச் சுத்துமாத்து.

நானூற்றைம்பது ஆண்டுகள் அந்நியராட்சியிலான கடைசியாகவிருந்த ஆங்கிலேயரிடமிருந்து, அன்று ஷசிலோன்| என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு 1947ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதென்பது வரலாற்றுப் பதிவு.
ஆனால், அந்தச் சுதந்திரமானது சிங்களவரினால் அபகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அவ்வினத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்குமே பயன்பட்டது என்பது வரலாற்று உண்மை.
1947 முதல் இன்று வரையான காலத்தில் டி.எஸ்.சேனநாயக்காவிலிருந்து மைத்திரிபால சிறிசேன வரையில் சிங்களவரினாலேயே இந்தத் தீவு ஆட்சி புரியப்பட்டு வருகிறது.
இரண்டு பெண் தலைவர்கள் உட்பட, இதுவரை ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தமிழரைக் கிள்ளுக் கீரைகளாகவே நடத்தி, அவர்களுக்கிருந்த அற்பசொற்ப சலுகைகளையும் பறித்துக் கொள்வதென்பது தொடரும் வரலாறு.
சலுகை என்ற சொல்லுக்கான உதாரணமாக, இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை எடுத்துக் கொள்ளலாம்;. தமிழிலான தேசிய கீதமென்று பலரும் பெருமையோடு கூறும் பாடலின் முதல் இரு வரிகளையும் பார்க்கலாம்.
ஷசிறீலங்கா தாயே, நம் சிறிலங்கா, நமோ நமோ நமோ நமோ தாயே| என்ற வரிகளில் எத்தனை தமிழ்ச் சொற்கள் உள்ளன? சிறிலங்கா என்பதற்கும் நமோ நமோ என்பதற்கும் தமிழ் வார்த்தைகள் இல்லையா?
மைத்திரி அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாடி, நல்லெண்ணத்தைக் காட்டி நல்லாட்சியை நிரூபித்துள்ளதாக சிலர் வாய்ப்பந்தல் போடுகின்றனர்.
இதிலுள்ள பிரதான அம்சம் என்னவெனில், சிங்களம் கலந்த தமிழில் தேசிய கீதம் பாடுவது தமிழிலான தேசிய கீதமென்று கூறி, முன்னைய ஆட்சியாளரான மகிந்த ராஜபக்ச தடை செய்திருந்தமையால் இப்போது மீண்டும் தமிழில் பாடியதை தமக்கான ஒரு வெற்றியாக மைத்திரி அரசு கருதுகிறது.
மகிந்தவின் மூர்க்கத்தனமான ஒரு முடிவை மைத்திரிபால சிறிசேன மாற்றியமைத்து விட்டதால் இது ஊடக முக்கியத்துவம் பெற்றுவிட்டதென்பதே யதார்த்தம்.
முழுமை பெறாத தமிழிலான தேசிய கீதத்தால் தமிழருக்கான உரிமை கிடைத்து விட்டதென்றும், தமிழர் தலைநிமிர்ந்து வாழும் நிலை உருவாகி விட்டதென்றும் கூறிவிட முடியாது.
காலி முகத்திடலில் நடைபெற்ற இவ்வருட சுதந்திர தின விழாவில் தமிழில் (?) தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேளையில், கூட்டமைப்பின் பிரமுகர் சம்பந்தனின் கண்களிலிருந்து நீர் முட்டி வழிந்ததாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று எழுதியுள்ளது.
இது ஆனந்தக் கண்ணீரா? அல்லது காலிமுக வெளியில் காலை நேரச் சூரியக்கதிர் கண்களில் நேரடியாகப் பாய்ந்ததால் ஏற்பட்ட கூச்சத்தால் கசிந்த கண்ணீரா? என்றோ ஒருநாள் அவரே இதற்கான காரணத்தைச் சொல்லும்வரை அவரது கண்ணீர்க் கதை காளி அம்மனின் சிங்கக் கொடிபோல தண்ணீராக ஓடிக்கொண்டேயிருக்கட்டும்.
இவ்வருடமும் சுதந்திர தின விழாவில் சம்பந்தரும் சுமந்திரனும் இரட்டையர்களாகக் கலந்து கொண்டனர். இவர்களை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என்பதைவிட தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் என்பதே சரி.
இதுவிடயமாக தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கருத்துவாதங்கள் உண்டு. இந்நிகழ்வில் சம்பந்தரும் தாமும் பங்குபற்றுவது நிச்சயமென்று ஒரு வாரத்துக்கு முன்னரே சுமந்திரன் அறிவித்துவிட்டார்.
ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பெப்ரவரி 3ம் திகதி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில், ‘பங்குபற்றுவது தொடர்பாக இன்னமும் முடிவில்லை” என்று தமது இயலாமையை அறியாமை வடிவத்தில் வெளிப்படுத்தினார்.
இச்செய்தி ஊடகங்களில் வெளிவந்த வேளையில், ஷசம் – சும| இரட்டையர் காலிமுகத்திடலில் சிங்கக் கொடியேற்றுவதை பக்தி சிரத்தையுடன் ஏற்றுக் கொண்டு நின்றனர்.
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான கிளிநொச்சி சிறீதரன், ‘தமிழ் மக்களைப் பொறுத்தளவில் பெப்ரவரி 4 சுதந்திரமற்ற நாள்” என்று கூறியுள்ளார்.
அப்படியானால், அந்நிகழ்வுக்குப் போன இரட்டையர் மீது மாவையும் சிறீதரனும் கேள்வி கேட்க முடியுமா – நிச்சயமாக முடியாது.
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது பற்றி கருத்துத் தெரிவித்த சம்பந்தன், ‘இதனால் அரசாங்கத்துக்கு நன்மை, மக்களுக்கும் நல்லதுதான்” என்று விளம்பியுள்ளார். இவர் கூறும் அரசாங்கத்துக்கு நன்மை என்பது, ஷதமிழர்களை ஏமாற்றிவிட்டோம்| என்று கொள்ளப்பட வேண்டியது. மக்களுக்கு நல்லது என்றால் அவர்கள் தமிழரா அல்லது சிங்களவரா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
சம~;டி முறை தொடர்பான உண்மைத் தன்மைகளைக் கண்டறிய ஸ்கொட்லாந்து சென்றிருந்த ஷசம்-சும| இரட்டையர் சுதந்திர தின விழாவில் பங்குபற்றுவதற்காகவே அவசரமாக கொழும்பு திரும்பியதாக கொழும்பின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பில் சம~;டிக்கு இடமில்லையென்று அரசாங்க தரப்பினர் ஒவ்வொருவரும் திடமாக அறிவித்த பின்னர் சம~;டி பற்றி அறிய என்ன இருக்கிறது. இது அப்பாவித் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எத்திப் பிழைக்கும் ஒரு முயற்சி.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சம~;டிக் கட்சியின் வாரிசுகளாக வந்தவர்கள் இப்போதுதான் சம~;டி பற்றி அறிய முயற்சிப்பதென்பது விசித்திரமானது. அதிலும், சம~;டி ஆட்சிமுறை இல்லாத ஸ்கொட்லாந்தில் அதுபற்றி அறிய விரும்பிச் சென்றது ஒருவகைச் சுத்துமாத்து என்றே சொல்ல வேண்டும்.
இதுதொடர்பாக இணைய ஊடகமொன்றில் வெளியான ஒரு கட்டுரையின் குறிப்பிட்ட சில பகுதிகளை இங்கு வாசிப்பது பொருத்தமானது.
ஷ1707ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றமும் இங்கிலாந்தின் நாடாளுமன்றமும் ஒரு நாடாகச் சங்கமிக்கும் சட்டங்களை நிறைவேற்றியதை அடுத்து ஸ்கொட்லாந்து தனியரசு நிலையை இழந்தது…. தனியான நீதித்துறையையும் வைப்பகத்தையும் ஆணையத்தையும் கொண்ட ஸ்கொட்லாந்துத் தேசத்துக்கு சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கம் வாயிலாக தனியான மாநில நாடாளுமன்றத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் வழங்குவதற்கு 1997ம் ஆண்டு பிரித்தானிய அரசு முடிவு செய்தது… இதன் தொடர்ச்சியாக 1999ம் ஆண்டிலிருந்து அதிகாரத்தைப் பரவலாக்கம் பெற்ற கட்டமைப்பாக ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்றமும் அதற்குப் பொறுப்புக் கூறும் ஆட்சியமைப்பாக ஸ்கொட்லாந்து அரசாங்கமும் இயங்கி வருகின்றன.
ஆனால், இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற கட்டமைப்புகளான பொதுச்சபையும், பிரபுக்கள் சபையும், முடியாட்சி பீடமும் நினைத்தால் இன்னுமொரு சட்டத்தை நிறைவேற்றி ஸ்கொட்லாந்துக்கு வழங்கப்பட்ட முன்னைய அதிகாரங்களைப் பறிக்கலாம்… இவற்றை அரசியல் அகராதியில் எவரும் சம~;டி என்று அழைப்பதில்லை. அதாவது ஸ்கொட்லாந்தில் சம~;டி அமைப்பு நடைமுறையில் இல்லைஷ என்று இக்கட்டுரை தெரிவிக்கிறது.
யதார்த்தம் இவ்வாறிருக்கையில் ஸ்கொட்லாந்தின் சம~;டி அமைப்பை ஆராயப் போவதாக ஷசம்-சும| இரட்டையர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை என்னவென்று சொல்வது?
உண்மையாக இதுபற்றி அவர்கள் ஆராய விரும்பியிருந்தால் சுவிற்சலாந்துக்கு அல்லது கனடாவுக்கு அல்லவா பயணித்திருக்க வேண்டும்! இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சுத்துமாத்து?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila