வடமாகாணசபையின் வரைபு வெளியானது!

northern-provincial-council

இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபையினது உத்தேச அரசியல் யாப்பு திருத்த வரைபு இன்று வெளியாகியுள்ளது.
அதில் வடக்கு மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், புதிய யாப்புக்குமான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் தமது கருத்தில் கொள்ளவேண்டுமென்று இத்தால் தீர்மானிக்கிறோம்.
1. அரசியல் தீர்வுக்கான கோட்பாடுகள்
1. சிங்களவருக்கும் தமிழர்களுக்குமிடையிலான யுத்தத்திற்கும் இனப்பூசலுக்குமான அடிப்படைக் காரணிகளை அடையாளம் கண்டு அவற்றைப்பற்றி உரையாடவேண்டும். அடக்குமுறைகள், அழிவுகள், கொலைகள் ஆகியன மீண்டும் நிகழாதவாறும் எல்லா மக்களுக்குக்கும் ஆபத்தின்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறும் , பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும்.
2. இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவனவற்றின் மத்தியஸ்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தலைவர்களும் ஒரு பேச்சுவார்த்தை நடைமுறையை அரசியல் தீர்வுக்கான வழியை நோக்கிச் செல்லும் படியாக ஆரம்பிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை இந்த நடைமுறையைச் செயல்படுத்துவதில் சாட்சியாகவும், உத்தரவாதம் அளிப்பவராகவும் செயல்பட வேண்டும்.
3. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். அவர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்தத் தவறினாலோ அல்லது தமிழ் மக்கள் ஒரு சர்வ ஜன வாக்கெடுப்பது அவசியம் என்று இந்த ஒப்பந்தத்தின் 5 வருட முடிவில் உணர்ந்தாலோ, ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு ஒரு சர்வ ஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர்களுக்கு உரித்துள்ளது.
4. புதிய அரசாங்கத்தின் தன்மை ஆக்க் குறைந்தது ஒன்றிணைந்த கூட்டரசாக இருக்கும்
5. இலங்கை மத்திய அரசின் அடிப்படைத்தன்மை மதச் சார்பற்றதாகவும், பன்மொழி, பல தேசங்கள், பல இனங்கள் உள்ளன என்பதை அங்கீகரிப்பதாகவும் இருக்கும்.
6. முஸ்லீம் மக்களின் அடையாளம் / உரிமைகள் ஆகியவற்றை அங்கீகரித்து ஒரு தகுந்த தீர்வுக்கு பேச்சுவார்த்தை மூலம் வரவேண்டும்.
7. மலைநாட்டுத் தமிழ் மக்களின் அடையாளம் / உரிமைகள் ஆகியவற்றை அங்கீகரித்து ஒரு தகுந்த தீர்வுக்கு பேச்சுவார்த்தை மூலம் வரவேண்டும்.
8. தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவை தமது எல்லா மக்களின் சமத்துவத்தையும் நாட்டின் பலவிதமான குணாதிசியங்களையும் பிரதிபலிக்கக் கூடியதாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.
9. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் முழுமையான தன்னாட்சி உரிமையை வழங்கக்கூடிய ஒரு புதிய யாப்பு நடைமுறைப் படுத்தப் படவேண்டும். இந்த யாப்பு பிரத்தியேகமான சில மக்களுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்காமல் எல்லா மக்களையும் சமமாக நடத்தும் முறையுள்ள, சமமான வாய்ப்புள்ள, சம அதிகாரங்களுள்ள அம்சங்களை உள்ளடக்கி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
10. 29-09-2015 திகதியில் “Promoting Reconciliation accountability and human rights in Sri Lanka ” என்ற தலைப்பிலான UNHRC தீர்மானம், 16-09-2016 திகதியில் “Report of the OHCHR Investigation on Sri Lanka (OISL) ” என்ற தலைப்பிலான தீர்மானம் ஆகியவற்றிற்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்கள் ஆகியோருடைய பங்களிப்புடன், சர்வதேசச் சட்டங்களால் வரையறுக்கப்பட்ட அத்தனை மனித உரிமை மீறல்களைப் பற்றிய ஒரு சரியான, நம்பகத்தன்மையுள்ள விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
2. நம்பிக்கையை வளர்த்தல்
இரண்டு முக்கிய தேசிய இனங்களுக்கும் இடையில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக கீழ்க்காணும் விடயங்கள் நிரைவேற்றப் படவேண்டும்.
1. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் ஆயுதப்படையினரால் குடி கொண்டுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வெளியேறவேண்டும். அத்துடன் ஆயுதப்படையினரின் முகாம்கள் 1983 க்கு முற்பட்ட நிலைக்குத் திரும்பவேண்டும்.
2. வலுக்கட்டாயத்தால் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்த களத்தில் ஆயுதப்படையினரால் கைது செய்யப்பட்ட்த் தமது துணைவர்கள், குழந்தைகளுடன் சரணடைந்தவர்கள் ஆகியோரைப் பற்றிய பொறுப்புடமை சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் மனமார்ந்த, அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
3. எல்லாத் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படவேண்டும்.
3. இலங்கைக் கூட்டரசிற்கான வரைச்சட்டம்
மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிகாரங்களைத் தமக்குள்ளே பிரித்துக்கொள்வதாக அமையும் ஒரு திட்டம் இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. மிகத் தெளிவாகவும் விபரமாகவும் மத்திய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களையும், மாநில அரசுகளுக்குத் தடை செய்யப்பட்ட அதிகாரங்களையும் தவிர மற்றைய அதிகாரங்கள் எல்லாம் மாநில அரசுகளைச் சார்ந்ததாக இருக்கும். பன்மொழிகளையும் பல கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய நாட்டின் தன்மையைக் கருத்தில் கொண்டு மாநிலங்கள் உருவாக்கப்படவேண்டும்.
3.1 ஒன்றிணைந்த இலங்கைக் கூட்டரசிற்கான கட்டமைப்பு
1. ஒன்றிணைந்த கூட்டரசு மாநில அரசுகளைக் கொண்டிருக்கும்.
a) 1978 ம் ஆண்டு யாப்பில் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அமைய, அருகருகே இணைந்துள்ள வடக்கு – கிழக்குப் பிரதேசத்தைக் கொண்டுள்ளதாக தமிழ் மக்களின் மாநில அரசு இருக்கும்.
b) இலங்கை 3-5 மாநிலங்களைக் கொண்டிருக்கும்.
c) முஸ்லிம் மக்களுடையதும், மலையக மக்களுடையதும் அபிலாசைகள் பற்றிக் கலந்தாலோசித்து அவைகள் நிறைவேற்றப் படவேண்டும்.
2. சில அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு மற்றைய அதிகாரங்கள் எல்லாம் மாநில அரசுகள் தம் வசம் வைத்திருக்கும்.
3. முதல்வர் (Premier) தலைமை வகிக்கும் ஒரு மாநில பாராளுமன்றம் இருக்கும்.
4. பிரதம மந்திரி ( Prime Minister) / ஜனாதிபதி தலைமை வகிக்கும் ஒரு மத்திய பாராளுமன்றம் மத்தியில் இருக்கும்.
5. மத்திய அரசு மதச் சார்பற்ற அரசாக இருக்கும். ஒரு தனிப்பட்ட மதத்திற்கோ அல்லது மொழிக்கோ அல்லது மக்களுக்கோ பிரத்தியேக சலுகை கொடுக்கக்கூடாது
6. ஆயுதப்படைகள் உட்பட எல்லா மத்திய உத்தியோகத்தர்களும் மக்களின் எண்ணிக்கைகு ஏற்ற வீதப்படி எல்லா மாநில அரசுகளின் ஊடாகத் தெரிவு செய்யப்படவேண்டும்.
3.2 ஒன்றிணைந்த கூட்டரசு
ஒன்றிணைந்த இலங்கைக் கூட்டரசில் உள்ள எல்லா மாநில அரசுகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு கட்டமைப்பாக கூட்டரசின் மத்திய பாராளுமன்றம் இருக்கும்.
3.2.1 மத்திய அரசாங்கத்தின் அமைப்பு
1. ஒரு கூட்டரசு யாப்பின் கீழ் மத்திய கூட்டரசு இயங்கும்.
2. மத்திய பாராளுமன்றம் மக்களவையையும் செனேற் சபையையும் கொண்டிருக்கும். மக்களவை மக்களால் தெரிவு செய்யப்படும். மாநில அரசுகளால் செனேற் சபை தெரிவு செய்யப்படும். செனேற் சபையில் எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்கும்.
3. மத்திய அரசின் யாப்பில் ஏற்படுத்தப்படும் திருத்தங்கள் மத்திய பாராளுமன்றத்தில் உள்ள மக்களவை, செனேற் சபை ஆகிய இரண்டிலும், ஒவ்வொரு மாநில பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
4. மத்திய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் எந்த சட்டமூலமும் மத்திய பாராளுமன்றத்தில் உள்ள மக்களவை, செனேற் சபை இரண்டிலும், ஒவ்வொரு மாநில பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படாவிடில் சட்டமாக வரமுடியாது. ஒரு மாநிலத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த சட்டமூலமும் அந்த மாநிலத்தில் செல்லுபடியாகாது
5. தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கவேண்டும்.
3.2.2 கூட்டரசின் மத்திய பாராளுமன்றத்தின் அதிகாரங்களும் கடமைகளும்
1. மத்திய பாதுகாப்பு
2. வெளிநாட்டு விவகாரங்கள். (குறிப்பு: மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுத் தூதரகத்திற்குள் தனது திறமைகளுக்கமைய தனது நன்மைக்காக ஒரு அலகை ஏற்படுத்துவதற்கு வடக்கு – கிழக்கு மாநில அரசிற்கு உரிமை உண்டு.)
3. ஐக்கிய நாட்டு சபை, சர்வதேச சட்டங்கள்/ உடன்படிக்கைகள்
4. மத்தியில் நிதி சம்பந்தமான கொள்கைகள்
5. குடிவரவு, குடி அகல்வு
6. குடியுரிமை
7. சுங்கம்
8. சர்வதேசங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரவுக் கட்டுப்பாடு.
9. சர்வதேசங்களுக்கு இடையேயான கடல் போக்குவரத்து
10. மத்திய அரசின் புகையிரதச் சேவைகள், மத்திய நெடுஞ்சாலைகள்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila