கைதுகள் குறித்து பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை : ஜனாதிபதி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கில் தொடரும் கைதுகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவது குறித்து பொதுமக்கள் அஞ்சவேண்டியதில்லையென்றும், இவ்விடயங்கள் குறித்து தாம் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். வடக்கு கிழக்கில் கடந்த சில நாட்களாக தொடரும் கைதுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தரப்பினர், கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு, முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையிலேயே இந்த கைதுகள் இடம்பெறுவதாகவும், சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கியின் எதிரொலியாக இந்த கைதுகள் இடம்பெறுவதாகவும் பல சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related Post:
Add Comments