யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக வீடுடைத்து இடம்பெற்ற கொள்ளைகளில் தொடர்புபட்ட வரும், சினிமா பாணியில் முகம் மறைத்து வாள்வெட்டு சம்பவங் களில் ஈடுபட்டவரும் எனக் கூறப் படும் பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பெருந்தொகையாக தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதங்களிற்கு மேலாக இது தொடர்பாக சுன்னா கம் பகுதியில் 15 முறைப்பாடு களும் தெல்லிப்பழை பகுதியில் 3 முறைப்பாடுகளும் அச்சுவேலி பகுதியில் 4 முறைப்பாடுகளும் கோப்பாய் பகுதியில் ஒரு முறைப் பாடும் பொலிஸாருக்கு கிடைக் கப்பெற்றி
ருந்தது.
இதனடிப்படையில் பொலிஸார் பல குழுக்களாக பிரிந்து விசாரணையை முன்னெடுத்து வந்தனர். இந் நிலையில் மேற்கூறிய பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட சுமார் ஐவர் கொண்ட குழு தொடர்பாக பொலி ஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் விரைந்த பொலிஸார் சுன்னாகம் பகுதிக்கு கொள்ளையடித்த நகைகளை விற்பதற்காக வந்திருந்த பிரதான சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை விசா ரணை செய்தபோது திருடிய நகைகளை உருக்கி கடைகளுக்கு விற் கும் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்ட்டார்.
அத்துடன் இக்குழுவின் ஏனைய சந்தேக நபர்கள் தப்பி சென்று தாங்கள் பாவித்த தொலைபேசி இலக்கங்களை மாற்றி மறைவாக வாழ்வதாக பொலிஸார் கூறினர்.
மீட்கப்ட்ட நகைகள் 57 பவுணுக்கு அதிகமா னது. எனினும் மீட்கப் பட்ட நகைகள் உருக்கப்பட்டமையினால் அவற்றை அடையாளம் காணமுடியாதுள்ளது.
பிரதான சந்தேக நபரான சுன்னாகம் அள வெட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த சிக்புக் என்று செல்லமாக அழைக்கப்படும் 24 வயதுடைய நபர் எனவும் மற்றைய நபர் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய வர் எனவும் தெரியவந்துள்ளது.இரண்டாமவர் பிரதான சந்தேக நபரினால் கொள்ளையடிக்கப்படும் நகை களை பெற்று அதனை உருக்கி கடைகளிற்கு விற்பனை செய்பவராவார்.
இவர்களை பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் 3 மாதங்களாக விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களது தொலைபேசி இலக்கங்கை பின் தொடர்ந்து தகவல்களை பெற்ற பின்னர் கைது செய்துள்ளனர்.
இது தவிர குறித்த குழுவில் பிரதான சந்தேக நபர் மாத்திரம் ஒரு தொலைபேசி இலக்கத்தை மாத்திரம் பாவித்துள்ளார்.
இவரை தாவடி பகுதி யில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏனைய அக்குழுவில் உள்ள நால்வர் மறைமுகமாக வாழ்ந்து வருவதுடன் தொலைபேசி இலக்கங்களை அடிக்கடி மாற்றி பயன்படுத்தி வருவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவ்வாறான தொடர் கொள்ளையில் ஈடுபட்ட போது இக் குழுவினர் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டமையினால் பொதுமக்கள் மீளவும் ஆவா குழுவினர் வந்து விட்டனர் என கதைக்கின்றனர்.
எனினும் இது தவறு என பொலிஸார் குறிப்பிடுவதுடன் வாள் வெட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஈடுபட்ட ஆவா குழுவை சேர்ந்த ஐவர் தற்போது சிறையில் இருக்கின்றனர்.
இதர உறுப்பினர்கள் தப்பி சென்று அக்குழு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. எனவே அது குறித்து எவ்வித அச்சமும் மக்கள் கொள்ளத் தேவையில்லை என பொலிஸார் ஊடகங்கள் வாயிலாக மக்களை கேட்டுள்ளனர். அத்துடன் கொள்ளை, தொடர்பிலான தகவல்களை தெரிந்திருந்தால் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மேற்படி கொள்ளை சந்தேக நபர் கைது நடவடிக்கை யில் சுன்னாகம் பிரதம பொலிஸ் பொறுப் பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தலைமையிலான பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பியசாந்த, தேவத யாளன், ஜேசுராஜ், ஹேரத், நாமல், அபயசேகர, உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் பங்கெடுத்தனர்.
இக்கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரிடம் இருந்து தங்க நகைகளை வாங்கிய நகை கடை உரிமை யாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸ் தரப்பு கவனம் செலுத்தியுள்ளது.