வடக்கில் ஆயிரக்கணக்காண படையினர் குவிக்கப்பட்டும் வன்முறைகள் தலைவிரித்தாடுகின்ற நிலையில், வடக்கிலிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைக்கு வழங்கினால், அங்கு நடைபெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவோம் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக வடக்கில் அரங்கேறிவரும் தொடர் வன்முறைச் சம்பவங்கள் குறித்து, ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஆயிரக்கணக்கில் முப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டும், இவ்வாறான பிரச்சினைகள் நடைபெறுகின்றதென்றால், அதுகுறித்து சந்தேகம் கொள்ள வைக்கின்றதென குறிப்பிட்ட அவர், மாகாண சபைக்கு அதிகாரத்தை தந்தால், இவற்றை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதில் எவ்வித சந்தேகமும் இல்லையென குறிப்பிட்டார். மேலும், வடக்கில் இராணுவத்தை முடக்கி வைப்பத்தில் எவ்வித பிரயோசனமும் இல்லையெனவும் வடக்கு முதல்வர் குறிப்பிட்டார். இராணுவத்தை முற்றாக வெளியேற்ற வேண்டுமென்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்பதோடு, இராணுவம் வடக்கில் முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், நாளாந்தம் காலை வேளையில் இராணுவத்தினர் வீதிகளில் உலாவுவதாகவும், இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தொடர்ந்தும் நீடிப்பதாகவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.
வடக்கில் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரத்தை தாருங்கள் : சி.வி

Related Post:
Add Comments