கனரி வோர்ஃ ப் உட்பட லண்டனில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள்

Hakim Nasri

லண்டன் மற்றும் கனரி வோர்ஃ ப் பகுதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய இரு ஆப்கன் இளைஞர்களை இத்தாலியப் பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளதாக சற்றுமுன்னர் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கைதானவர்கள் அதிநவீன ஆயுதங்களுடன் காணப்படும் படங்களும் வெளியாகியுள்ளன.
ஹக்கீம் நஸ்ரி (23) மற்றும் குலிஸ்தான் அகமட்சாய் (29) ஆகிய இருவருமே இத்தாலியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் லண்டன், பரிஸ், ரோம் ஆகிய நகரங்களின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக பொலிசாரால் கூறப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிகையில்; சர்வதேச பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்துக்குரியவராக ஹக்கீம் நஸ்ரி இருப்பதாகவும் குலிஸ்தான் அகமட்சாய் சட்டவிரோத குடிவரவாளர் எனவும் குறிப்பிட்டனர். அத்துடன் ஐ.எஸ் தீவிரவாதிகளுடனும் தொடர்புபட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து இவர்கள் ஆயுதங்களை தாக்கியவாறு நிற்கும் படங்களையும் விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்ற முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்தும் திட்டங்கள் ஆகியவற்றையும் பொலிசார் பெற்றுள்ளனர்.
Hakim Nasri

Canary Wharf
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila