கொட்டும் மழையில் திருமலையில் அனுஷ்டிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளின் நினைவுகூரல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த ஒருவார காலமாக ஈகைச் சுடரேற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், கொட்டும் அடை மழையையும் பொருட்படுத்தாது, நேற்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியளவில், திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்தில், ஈகை சுடரேற்றி இறந்த உறவுகள் நினைவு கூரப்பட்டனர். வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின்போது, உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கடந்த காலத்தில் நடந்தேறிய கசப்பான அனுபவங்களை இதன்போது சுட்டிக்காட்டிய சிவாஜிலிங்கம், கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி, திருகோணமலையில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையென்பதையும் சுட்டிக்காட்டினார்.
Related Post:
Add Comments