யுத்த காலத்துடன் ஒப்பிடுகையில் சித்திரவதைகள் குறைவடைந்துள்ளன: ஐ.நா
யுத்த காலத்துடன் ஒப்பிடுகையில் சித்திரவதைகள் குறைவடைந்துள்ள போதிலும், அந்த நடவடிக்கைகள் முழுமையாக குறைவடையவில்லை என சித்திரவதைகள் தொடர்பில் ஆராயும் ஐ.நாவின் விசேட நிபுணர் ஹீவான் ஈ மென்டிஸ் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைகளின் போது தொடர்ந்தும் சித்திரவதைகள் காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸார் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தை பின்பற்றுவதில்லை. நீதிமன்றமும் பொலிஸாரின் தகவல்களை ஏற்றுக்கொள்கின்றமை பிழையான விடயமாகும். இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அத்துடன், இலங்கையில் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்கள் நடாத்திச் செல்லப்பட்டு வருவதானது சிறந்த நடவடிக்கை இல்லை. நாம் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தோம். அங்கு 40 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் 39 ஆண்களும், ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர். இது மிக மோசமான நிலையாகும். இதேவேளை, இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை எடுத்துக் கொண்டால், சிறையொன்றில் 500 வீதமான சிறைக்கைதிகள் உள்ளனர். மேலும், அரசியலமைப்பு சபை மிகுந்த சிறந்த சேவையை நாட்டிற்காக வழங்கும் என நாம் நம்புகின்றோம். எமது விஜயத்தின் போது தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.
Related Post:
Add Comments