
புதிய அரசு ஆட்சிக்கு வந்தாலும் கூட கடந்த கால அரசில் எமக்கு எதிரான அடக்கு முறைகள் வெளிப்படையாக எவ்வாறு இருந்தனவோ அவை தற்போதும் வேறு வடிவில் வேறு விததில் முன்னெடுக்கப்டுகிறன்றன என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.
முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று செம்மனி பகுதியில் ஆரம்பிக்கபட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் இனத்தின் இருப்பை இங்கு கேள்விக் குறியாக்கும் வகையில் எமது விடுதலையை துவம்சம் செய்யும் ஏற்பாட்டை இந்த அரசும் முன்னெடுக்கிறது. தமிழ் இனப்படுகொலையை மிக பெரியளவில் மேற்கொண்ட நினைவு தினமாக இந்த மே 18 ஆம் திகதி எம்மால் உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவேந்தலாக கடைப்பிடிக்கபடுகிறது.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் ஒரு வாரம் இந்த நினைவேந்தல் அனுஸ்டிக்கபடுகிறது. இந்த வகையில் இன்று இதனை ஆரம்பித்து வைத்த இந்த செம்மனியும் தமிழ் மக்கள் படுகொலை வரலாற்றில் முக்கிய இடமாக இருக்கிறது. இதன் ஒரு அங்கமாக பாடசாலை சென்ற கிருசாந்தி படுகொலை செய்யபட்டு இங்கு புதைக்கபட்டார் பின்பு பல தமிழ் மக்கள் கொண்று புதைக்கபட்டு தடையகள் அழிக்கபட்டன.
ஆகவே உயிர் நீத்த உறவுகளுக்காக நாம் ஒரு சத்தியம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எங்களுடைய விடுதலை பாதையில் ஒரு அங்குலமேனும் திசை திரும்பாமல் எமது மக்களின் தேசிய அபிலாசைகளுக்கேற்ப இன விடுதலையை முன்னெடுக்க வேண்டிய நிலை உள்ளது.
எப்பவுமே கூட்டு பிராத்தனைக்கு வலு அதிகம் மக்கள் ஒன்று கூடி இவ்வாறான பிராத்தனைகளை செய்வதன் மூலம் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல சாத்தியமான விடயமும் கூட. ஆகவே வடக்கு மாகாண சபையால் ஏற்பாடு செய்யபட்டுள்ள முள்ளிவாய்கால் நினைவேந்தல் இறுதி நிகழ்வில் மக்கள் அணிதிரண்டு கலந்து கொள்ள அறைகூவல் விடுக்கிறோம் என்றார்.