கறுப்பு ஜூலையின் தொடர் சம்பவங்களுள் ஒன்றாக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ்க் கைதிகளை சிங்களக் கைதிகள் கோரமாகக் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்த நாள் இன்றாகும்.
இன்நாள் எமது மண் விடுதலைக்காக தமது உயிர்களைப் பலிகொடுத்த அனைத்து மக்களினதும் தியாகத்தை நினைவுகூரும் வகையில் தமிழர் தேசிய வீரர் தினம் அனுட்டிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வானது இன்று காலை நல்லூர் ஆலய முன்றலிலும் அதனைத் தொடர்ந்து தேவாலயத்திலும் நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.