கடந்த நாலு மாதத்திற்கு மேலாக ஒரு பிரேரணையை கொண்டு வாறோம் என சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குவாங்க.
பிறகு முதலமைச்சர் இல்லை. விவசாய அமைச்சர் இல்லை என ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தள்ளி வைச்சுட்டே வந்தாங்க.
நேற்று எடுத்தாங்க. பிரேரணையை முன் வைத்து பிரேரணையை கொண்டு வந்தவர் 30 நிமிடத்திற்கு மேல் உரையாற்றிகொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் மற்றுமொரு உறுப்பினர் எழும்பி பிரேரணையை மட்டும் முன் மொழியுங்கள். சொற்பொழிவுநடத்தாதீர்கள் என கூறினார்
அதனை தொடர்ந்து ஒவ்வொருத்தனா எழும்பி கருத்து சொல்ல ஒரு மணி நேரம் தாண்டியது.
சுமார் 1. 30 நிமிடம் ஒரு பிரேரணையை முன் வைத்து நேரத்தை வீண் விரயம் ஆக்கி விட்டு, இறுதியில் சொல்லுறார் சக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்காக இந்த பிரேரணையை வாபஸ் பெறுகின்றேன். பிரேரணையை கொண்டு வந்த உறுப்பினர்…
1. குறித்த பிரேரணை , விவசாய அமைச்சின் முறைகேடுகளை விசாரிக்க தெரிவுக்குழு அமைக்க வேண்டும். என கோரும் பிரேரணை.
ஏற்கனவே இரண்டு அமர்வு நடாத்தி, ஐந்து லட்சம் ரூபாய் செலவழிச்சு , 8 மணி நேர போராட்டத்தின் பின் , வடமாகாண அமைச்சுக்கள் மீதான குற்றசாட்டுக்கள், முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்க முதலமைச்சரால் குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
அந்த குழு விவசாய அமைச்சு தொடர்பிலும் விசாரணை செய்யும்.
இவ்வாறான நிலையில் இந்த பிரேரணை தேவையா ?
2. ஒரு பிரேரணை எத்தனை சொல்லுக்குள் இருக்க வேண்டும். இவ்வளவு நேரத்திற்குள் பேச வேண்டும் என காலவரை உள்ளது.
ஆனால் நேற்று அதனை அவைத்தலைவர் கவனத்தில் எடுக்காததன் மர்மம் என்ன ?
இதே கடந்த சில அமர்வுகளுக்கு முன்னர் ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளனர். என முல்லைத்தீவு மாவட்ட வறுமை தொடர்பில் உரையாற்றும் போது நேரம் போதாது நேரம் போதாது எனகூறி அந்த உறுப்பினரின் உரையை சுருக்க செய்தவர் இந்த அவைத்தலைவர் என்பது எனக்கு மட்டும் தான் ஞாபகம் இருக்கோ தெரியாது.
3. சபையில் ஒழுங்கு இருக்க வேண்டும் என அடிக்கடி ஒருவர் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக் காட்டிக்கொண்டு இருப்பார். அவர் நேற்று மௌனமாக இருந்தார்.
4. இதுவரை காலமும் அந்த பிரேரணை எடுத்துக் கொள்ளாததற்கு முதலமைச்சர் இல்லை சம்பந்தப்பட்ட அமைச்சர் இல்லை என காரணம் கூறப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் நேற்று முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இல்லாத நிலையிலையே குறித்த பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளபட்டது.
5. இந்த பிரேரணை கொண்டுவரும் போது முதலமைச்சர் , சம்பந்தப்பட்ட அமைச்சர் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அவைத்தலைவர் நேற்று கூறினார்.
அப்ப இதற்கு முன்னால் சொன்னீங்களே முதலமைச்சர் அமைச்சர் இருக்கும் போது இந்த பிரேரனையை கொண்டு வாருங்கள் என. (அது போன மாசம் இது இந்த மாசமா)
6. இந்த பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாம். குழு கூட்ட தீர்மானம் புறக்கணிக்கப்பட்டதன் மர்மம் என்ன?
7. பிரேரணை முன் வைக்கப்பட்டு 30 நிமிட உரையின் பின்னர் எழுந்த உறுப்பினர்கள் , அமைச்சுக்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்க முதலமைச்சர் குழு அமைத்துள்ளார்.
அந்த குழுவிடம் விவசாய அமைச்சு தொடர்பான குற்றசாட்டுக்கு சான்றுகள் ஆவணங்கள் இருந்தால் சமர்ப்பியுங்கள் என கூறினார்கள்.
அதனை அடுத்து அந்த உறுப்பினரும் தனது இந்த பிரேரணையை வாபஸ் பெற்று முதலமைச்சரின் குழுவிடம் தன்னிடமுள்ள சான்றுகள் ஆவணங்களை ஒப்படைக்கிறேன். என கூறி பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இப்ப எனக்கு என்ன சந்தேகம் என்றால்,
இதனை குழு கூட்டத்திலையே அந்த உறுப்பினரிடம் சக உறுப்பினர்கள் கூறி இந்த பிரேரணையை எடுத்துக்கொள்ளாமல் விட்டு இருக்கலாம்.
அல்லது இந்த பிரேரணையை சபையில் குறித்த உறுப்பினர் முன் மொழிய முதல் சக உறுப்பினர்கள் எழுந்து இந்த கருத்தை முன் வைத்து இந்த பிரேரணையை முதலே வாபஸ் பெற வைத்து இருந்தால் , அந்தாளும் அந்த பிரேரணையை முன் வைத்து வீணாக 30 நிமிடம் உரையாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காது.
இவனுங்க இதெல்லாம் தெரிந்து செய்கிறான்களா ?
இல்லை தெரியாமல் செய்யுறாங்களா ?