யாழ்ப்பாணம் வல்லை வெளியில் உள்ள வல்லை முனியப்பர் கோவில் இரு இராணுவ வீரர்கள் பாதணிகளை கழற்றாமல் ஆலையத்துக்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இவை இந்துக் கலாச்சாரத்தையும், இந்துக்களின் நம்பிக்கைகளை மீறும் செயற்பாடாகவே குறித்த ஆலயத்திற்கு வருகை தரும் மக்கள் கருதுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அன்றைய காலம் தொட்டு மிகவும் பாரம்பரிய கோவிலாகவும், மிக சக்திவாய்ந்த ஆலயமாக முனியப்பர் ஆலயம் விளங்குகின்றது.
இவ்வாறன புகழ்பெற்ற ஆலயத்தில் பாதணிகளை கழற்றாமல் சென்றது பெரும் அதிர்ச்சியை தருவதாக அப்பகுதியால் செல்லும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்துக்கள் கடவுளின் உறைவிடமகாக ஆலயத்தை கருதுகின்றனர் மன அமைதியைத்தரும் ஆலயத்தினுள் பாதணிகள் கொண்டு செல்லப்படக்கூடாது என்பதே ஐதீகம் அவை இங்கே மீறப்பட்டுள்ளது.
இந்து மதத்தவர்கள் ஒரு போதும் வேறு இனத்தவர்கள் கோவிலுக்குள் வரவேண்டாம் என கூற மாட்டார்கள், இருப்பினும் இதை சாதகமாக பயன்படுத்தி இவ்வாறான தகாத மதக் கொள்கைகளை மீறும் செயற்பாடுகளில் ஈடுபடுவது முறைகேடான செயல் என மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை வடக்கில் இராணுவத்தினரை வெறியேற்ற கோரி ஒருபக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இன்னொரு பக்கத்தில் இராணுவத்தினர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றமை கண்டிக்கப்படவேண்டிய செயலாகத்தான் கருதவேண்டும்.