பிரித்தானியாவில் MASTER CARD பாவனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது £300 ஸ்ரேலிங் பவுண் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது.
MASTER CARD நிறுவனம் முறைகேடாக அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களிடம் சேவைப்பணம் அறவிட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் பாவனையாளர்களுக்கு இழப்பீடாக 14 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நிதித்துறை கண்காணிப்பு மையமான ((Financial Ombudsman Service) தொடர்ந்திருக்கும் வழக்கில் 1992 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் நான்கு கோடியே 60 லட்சம் மக்களிடம் முறைகேடாக மேலதிக பணம் அறவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
1992 ம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் MASTER CARD கடனட்டையை பயன்படுத்திய அனைவரும் இந்த இழப்பீட்டை பெறமுடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டன் நிதித்துறை வரலாற்றில் தனியொரு நிதி நிறுவனமொன்று பொது மக்களுக்கு மிகப் பெருந்தொகையை இழப்பீடாக வழங்குமாறு நிர்பந்திக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்