பயங்கரவாத தடுப்பு பிரிவின ரால் (ரி.ஐ.டி) யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் நேற்றைய தினம் செய்யப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மனித உரிமை ஆணைக் குழுவில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
யாழ். கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், யாழ். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், யாழ். சில்லாலைப் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் அரவிந்தன் ஆகியோரே நேற் றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக் குழுவில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களால் மேற்குறித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்தமைக்கான காரணங்கள் எவையும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அண்மையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தமை போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த கைதுகள் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவருகிறது.