நல்லாட்சி என்று தன்னை மார் தட்டிக்கொள்ளும் மைத்திரி அரசு, கடத்தல்களையும் கைதுகளையும் தமிழர் தாயக பகுதிகளில் அரங்கேற்றி வருகிறது .
இவ் வகையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களில் தமிழின உணர்வாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழின உணர்வாளர்களை வடிகட்டுவதற்காக ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் , ஆவா என்ற பெயரில் சமூக விரோத குழுவொன்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கி, அவ் குழு உறுப்பினர்களை கைது செய்வது போல் தமிழின உணர்வாளர்களை கைது செய்து வருகின்றது.
அண்மையில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வான எழுக தமிழ் நிகழ்விற்கு குறித்த இளைஞர் முழுவீச்சுடன் ஈடுபட்டதாகவும், அதனால் தான் ஆவா குழுவின் பெயரை பயன் படுத்தி, தமிழின உணர்வாளர்களை அரசு ஒடுக்கி வருகிறது என்றும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.