சிறிய விடயத்தை பெரிது படுத்துவதை இச் சொல் குறித்துநிற்கும். பூதாகாரம் என்ற சொல்லின் பொருள் பலருக்குத் தெரியாதா யினும் அந்தச் சொல் குறித்து நிற்கும் பொருள் பலரையும் இடைஞ்சல் படுத்தியுள்ளதுடன் பெரும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பூதாகாரம் என்ற சொற்பதம் அரசியலுக்கு மிகவும் பரீட்சயமானது. சிறிய விடயத்தை பெரிதுபடுத்தி அரசியல்வாதிகள் வாதம் நடத்துவதை பார்க்கும்போது, அடேங் கப்பா! மிகப்பெரியதொரு பிரச்சினையை எடுத்து அக்கு வேறு ஆணிவேறாக பிய்க்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றும்.
ஆனால், அதற்குள் எதுவுமே இருக்காது. இப்படியான சம்பவங்களுக்கு இலங்கை அரசி யலில் பஞ்சமே கிடையாது எனலாம்.
அது சரி; இப்போது பூதாகாரம் என்பது இங்கு எதற்காக? நீங்களும் சிறிய விடயத்தை பூதா காரமாகப் பார்கின்றீர்களா? என்ற உங்கள் முணு முணுப்பும் நம் செவிகளில் முட்டுகிறது.
எல்லாம் காரணத்தோடுதான். அதாவது இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவேண்டிய காலகட்டம் நெருங்கும் வேளையில், புதிய அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் வெளிவர இருக்கின்ற வேளையில் - ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வும்; முடிந்தால் கவிழ்த்துப்பார் என்று ரணில் தரப்பும் மோதுகின்றன.
ஆட்சியைக் கவிழ்ப்பது என்ற மகிந்த ராஜபக்வின் சபதம் நிறைவேறுவது என்பது உடனடிச் சாத்தியம் இல்லை என அனைவருக்கும் தெரியும்.
இருந்தும் நல்லாட்சியில் முன்வைக்கப்படும் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் அதிககவனம் கொண்டால்; அது இலங்கை ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்ற அடிப்படையில்,
கவனக்கலைப்பானாகவே ஆட்சிக்கவிழ்ப்பு என்ற விடயம் முகிழ்ப்படைந்துள்ளது.
அட! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஆட்சியைக் கவிழ்க்கப்போகிறாராம். அது நடக் கவே மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு உறுதியாக இருக்கிறதாம். என்ன நடக்குமோ! ஏது நடக்குமோ! என்ற ஒரு ஏக்க நிலையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
ஆட்சியைக் கவிழ்ப்பது என்பதை விட ஆட்சியை ஒப்படைக்காமல் விடுவது என்பதே மகிந்த ராஜபக்வுக்கு சாத்தியமான விடயமாக இருந்தது.
எனினும் சில தொலைபேசி அழைப்புகளை அடுத்து ஆட்சியை ஒப்படைத்து விட்டு அம்பாந் தோட்டையில் உள்ள தன்வீட்டிற்கு சென்றவர் மகிந்த ராஜபக்.
இவ்வாறு வெறுங்கையோடு அம்பாந்தோட்டை க்கு சென்றவர் இனி எழுந்து வந்து ஆட்சி யைக் கவிழ்ப்பது சாத்தியமா என்ன?
அவ்வாறு ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டால் அமெரிக்கா சும்மா பார்த்துக்கொண்டா இருக்கும் இது போன்ற கேள்விகள் எழுந்தாலும் ஆட்சிக் கவிழ்ப்பு என்ற விடயம் சிறிது காலத்திற்கு பேசுபடு பொருளாகவே இருக்கப்போகிறது.
ஆம்! இனப்பிரச்சினைக்கான தீர்வு - புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் இவைவெளி வரவிருக்கின்ற நேரத்தில் வேறொரு பிரச்சி னையை பூதாகாரப்படுத்தி அதற்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் புதிய அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தை தமக்கு சாதகமாகவும் இனப் பிரச்சினை தீர்வில் நல்லாட்சிக்கு விருப்பம் இருந்தாலும் ஆட்சிக்கவிழ்ப்பு என்பது நல்லாட் சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறித் தப்பிவிட லாம் அல்லவா? இதற்காகவே எல்லாம் நடக்கி றது என்பதே நிஜம்.