இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் வீசினார்கள்! நெருப்பால் சுட்டது போல இருந்தது : பலரும் உயிரிழந்தனர்

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போது பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதன் போது பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு, பொது மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அதனை நம்பி அங்கு சென்ற மக்களுக்கு அதிர்ச்சியே காணப்பட்டது. பாதுகாப்பு வலயங்களுக்குள்ளும் செல் வீச்சு தாக்குதல், விமான குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற மே மாதம் 14,15,16,17ஆம் திகதிகளில் அதிகளவான பொது மக்கள் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் அண்மையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடகிழக்கில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கே.தேவராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இறுதி கட்ட யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பாவிக்கப்பட்டன. இந்த குண்டு தாக்குதலுக்கு இலக்கானவர்களின் உடல்கள் கருகிவிடும்.
குண்டுகள் வெடிக்கும். எரிந்துகொண்டே குண்டுகள் விழும். பாதிக்கப்பட்டவர்களின் உடல் நெருப்பால் சுட்டதை போன்று மாறிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ஆதரங்கள் பல வெளியாகியுள்ள நிலையில், கண் கண்ட சாட்சியங்களாக நாங்கள் இருக்கின்றோம். எனவே, எமக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம்.
அதைவிடுத்து, இதனை யாரும் மறுக்க முடியாது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறவேண்டும்.
எனினும், இலங்கை அரசாங்கம் அதனை மறைத்து சர்வதேச நாடுகளையும் ஏமாற்ற வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது எமது உறவுகளை படையினரிடம் கையளித்தோம். உடனடியாக விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தனர். இன்று எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் எமது உறவுகள் திரும்பி வரவில்லை.
காணாமல் போனவர்கள் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது. இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் வைத்து 287 பேர் படையினரிடம் கையளிக்கப்பட்டனர்.
அதற்கான தரவுகளும் எங்களிடம் இருக்கின்றன. இதனை விடவும் அதிகமானவர்களே படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இறுதி யுத்தத்தின் போது தர்மம் மீறப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நீதியை கோரி இன்று வீதியில் இருக்கின்றனர்.
எனவே, காலம் தாழ்த்தாது அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவது ஏற்புடையதல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila