குறித்த விகாரை சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டட வேலைகள் நடைபெற்றதனை அடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதியில் பௌத்த பிக்குகள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் , இன்று யாழ்ப்பாணத்திற்கு 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கவுள்ள 300 பிக்குகள்!
Add Comments