கொலைக்கு உதவிய பணியாளர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டு அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பிரேசிலில் உள்ள இலங்கை தூதரகத்தின் பணியாளரான ரூபசிங்கவின் மனைவி வழங்கிய முறைப்பாட்டின்படி, தமது கணவரை மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவும் அவரது மனைவியும் ஆடைகளை கழுவுமாறு அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கமல் குணரட்ன, ரூபசிங்கவை தலையில் தாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கமல் குணரட்னவின் நந்திக்கடலுக்கான பாதை என்ற புத்தகம் காரணமாக இலங்கை இராணுவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது விடுதலைப்புலிகளின் அனுதாபிகளுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் தொடர்புடையவருக்கு பேர்லினில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றும் ஒரு கொலையின் சந்தேகநபராக கருதப்படும் ஒருவரை தாய்லாந்தின் இலங்கை தூதரகத்தின் இரண்டாம் நிலை செய்தியாளராக முன்னைய பதவியில் அமர்த்தியதாகவும் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். |
கொலை வழக்கில் சிக்குகிறார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!
Related Post:
Add Comments