லண்டனில் பயங்கரவாதிகள் அட்டகாசம் - 6 பேர் பலி - 48 பேர் படுகாயம்

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன் 48 பேர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்றதாக அழைப்பு கிடைத்த 8 நிமிடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்களும் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.




லண்டனில் உள்ள London Bridge station பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது.
அந்த வேனில் வந்த மர்மநபர்கள் மூன்று பேர் கையில் பிளேடுகள் மற்றும் கத்தியுடன் கீழே இறங்கி அங்கிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக லண்டன் நகரம் பெரும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது.
லண்டன் தாக்குதலை தொடர்ந்து 48 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக லண்டன் அம்பியுலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
குறித்த 48 பேரும் லண்டனிலுள்ள ஐந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை லண்டன் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை தொடந்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய அரசாங்கத்தின் கோப்ரா அவசரக் குழுவின் கூட்டம் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு பிரித்தானிய பிரதமர் Downing Street பகுதிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒரே இரவில் சம்பவம் தொடர்பான தகவல்களை அவர் பெற்று கொண்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila