முதலமைச்சர் பணித்தால் தான் தனது அமைச்சரவை பதவியினை துறந்து வெளியேற தயாராக இருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் இன்றைய விடேச அமர்வினில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தனது உரையினில் முடிவினில் இச்செய்தியை விடுத்தார்.
முதலமைச்சருடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த அமைச்சர் பொ.ஜங்கரநேசனின் இக்கருத்து அமைச்சரவையினை கலைக்கும் முதலமைச்சரது முடிவுக்கு வலுச்சேர்க்கும் வகையினில் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் பொ.ஜங்கரநேசனின் உரையின் முக்கிய சாரம்சம்சங்களாக
1.என்மீதான இலஞ்சம் ஊழல் நிதிமோசடிக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை உய்தறிவுகளாக வெளிப்படுத்திய விசாரணைக்குழு, தனது முடிவில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
2. 13வது திருத்தச்சட்டத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவர் சுற்றுச்சூழல் சாரந்த விடயங்களில் தலையிடுவதை விசாரணைக்குழு சட்பூர்வமற்றதென நிறுவ முயன்றுள்ளது.
3.அமைச்சின் செயற்திட்டங்களின் கொள்கைப்பெறுமதிகளை , விசாரணைக்குழு தனது செயற்பாட்டு எல்லைக்கு அப்பால் சென்று கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
4. எவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன்,சுன்னாகம் குடிதண்ணீர் விவகார ஆய்வு குழு செயற்படவில்லை.
Add Comments