அமைச்சராக யாரை நிய மிப்பது தொடர்பில் ரெலோ கூடியது, முடிவு எட்டப்பட வில்லை என செல்வம் எம். பி தெரிவிப்பு.
வட மாகாண அமைச்சராகவுள்ள டெனீஸ்வரனை பதவி நீக்கியதும் யாரை அமைச்சராக பரிந்துரைப்பது என ரெலோவின் அரசியல் குழு நேற்று வவுனியாவில் ஆராய்ந்துள்ளது.
இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக் கலநாதனிடம் கேட்டபோது, கட்சி விதிமுறைகளை மீறி வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் செயற்பட்டு வரு வதாகவும் அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறும் வட மாகாண முதலமைச்சருக்கு எமது கட்சி பரிந்துரைத்திருந்தது.
இந் நிலையில் அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கும் பட்சத்தில் தமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிக்க பரிந் துரைப்பது என்பது தொடர்பாக நேற்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத் தில் கட்சியின் அரசியல் குழு கூடி தீர்மானித்திருந்தது.
எனினும் இக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாமை யினால் நாளை அனைத்து அரசியல்குழு உறுப்பினர் களும் தொலைபேசி மூலமாக தமது தெரிவுகளை தெரி விப்பது எனவும் அதன் பின் னர் உடனடியாக முதலமைச் சருக்கு ரெலோ கட்சியின் சார் பில் புதிய அமைச்சருக்கான நபரை பரிந்துரைப்பது என வும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.