பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கெதிராக கிளிநொச்சி இன்று 19-07-2017 ஆர்ப்பாட்டம் ஒன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில்  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பூநகரி, பளை,கண்டாவளை கரைச்சி பிரதேசங்களை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.
இதன் போது கருத்து  தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா் பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியானவர்  இவ்வாறு ஒரு சமூக மக்களை தரம்தாழ்த்திப் பேசுவது எந்த நிலையிலும் அனுமதிக்கக்கூடியதல்ல.
இவ்வாறு ஏற்றத்தாழ்வாகச் சமூகத்தைப் பார்க்கும் ஒருவர் சமூகங்களைச் சமத்துவமாக நடத்துவார் என யாரும் எதிர்பார்க்கவும் முடியாது எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் சமூக நீதியையும் விடுதலையையும் விரும்புவோர் அனைவரும் இந்த நீதியற்ற செயலைக் கண்டிப்பதோடு, இதற்குத் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கின்றனா்.
அந்த வகையில்  சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இந்த அநீதியை முழுமையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுடன் என்றும் இணைந்திருக்கும் என்பதை உறுதி கூறுகிறது எனத் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila