இது தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம், காணி உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து, அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர் கூறியதாவது, “கொக்குத்தொடுவாய் பிரதேச மக்கள், கடந்த 1983ஆம்ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெயர்ந்ததை அடுத்து, அம்மக்களுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் காணிகள், வெலிஓயா பிரதேச பகுதியிலிருந்து அபகரிக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், மீண்டும் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கில், அளவீட்டுச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. “கொக்குத்தொடுவாய் பகுதியில், 3 கிராம அலுவலகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றில் வாழ்கின்ற மக்கள், பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்த மக்களின் நீர்ப்பாசனக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். காணி அளவீடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களின் சொந்தக் காணிகள், மக்களிடமே ஒப்படைக்கப்படல் வேண்டும். தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து, தென்னிலங்கை மக்களுக்குக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். |
மணலாறில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க மீண்டும் நில அளவை!
Posted by : srifm on Flash News On 02:29:00
Related Post:
Add Comments