நெல்லியடியில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடித்தனம்!

நெல்லியடி- கப்பூது வீதியில் இன்று அதிகாலை முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர். கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கியுள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டு நால்வரும் தப்பியோடியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளை கொத்தி சேதப்படுத்தியதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாள்வெட்டுக் குழுவினர் தலை மறைவாகியுள்ளதாகத் கூறப்படுகிறது. சிறிது நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் அந்தப் பகுதிக்கு வந்து கொத்தப்பட்ட நிலையிலிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila