ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் 36ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் கலந்து கொள்வதற்காக பல நாடுகளில் இருந்தும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகைத்தந்துள்ளனர்.
இதன்போது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி இந்தியாவிலிருந்து ஜெனிவா சென்றுள்ள வைகோவுடன், இலங்கையிலிருந்து ஜெனிவா சென்றுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் வீரசேகர குழுவில் அங்கம் வகிக்கும் பெண் ஒருவர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து வைகோ கருத்து தெரிவிக்கையில்,
“நீ தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது? நீ யார்?” என கேள்வி கேட்டார். இதன்போது குறித்த சிங்கள பெண்ணுக்கும் வைகோவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பெண்ணுடன் வந்திருந்த ஆண்களும், முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வந்து தன்னை பயமுறுத்தியதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video?