உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளதா? - சுமந்திரனின் பரப்புரை பொய் என்கிறார் குருபரன்


இலங்கையின் உயர் நீதிமன் றம் தமிழர்களின் உள்ளக சுயநிர் ணய உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பரப்புரை செய்து வரும் நிலையில், அவ்வாறு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரை யாளர் கு.குருபரன் அடியோடு 
மறுத்துள்ளார். 

மேலும் 13 ஆம் திருத்த சட்டத்தை ஒத்ததாக புதிய அரசியலமைப்பு வரப்போகின்றது எனவும் எதிர்வு கூறியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற பதங்கள் தாங்கி வெளிப்படையாக இனங் காணப்பட வேண்டுமா? என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சி அடிப்படையில்தான் தீர்வு என்று திரும்பத் திரும்ப சொல்கின்றார்கள். 

ஆனால் எம்மத்தி யில் எங்களுடைய தலைவர்கள் அவர்கள் ஒற்றையாட்சியை தாண்டி வந்துவிட்டார்கள் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்வி எழுகின்றது. 

பொறுப்புக் கூறலாக இருந்தாலும், அரசியல் தீர்வாக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேனவினால் ராஜபக்ஷ வால் வகுத்த எல்லைகளை தாண்டி வர முடியவில்லை. ஏனென்றால் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த எந்த நிலைப்பாடுகளை எடுத்தாரோ அதே நிலைப் பாடுகளில் இருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை என்று சொன்னால்தான் தாங்கள் தொடர்ந்தும் அரசியலில் நிலைக்கலாம் என அவர்கள் நம்புகின்றார்கள்.

இங்கு சிறிய நிலம் விடுவிக்கப்பட்டாலும், விடுவிக்கப்படவில்லை என்றே தெற்கில் இன் றைய அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது. 

இதற்கு காரணம் ராஜபக்ஷ வகுத்த எல்லை களை தாண்டி வராமல் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள்.

இன்னும் ஆழமாக பார்த் தால் இது ராஜபக்ஷ வகுத்த எல்லை கூட அல்ல, சிங்கள பௌத்த கருத்தியல் காலம் காலமாக வகுத்து வைத்துள்ள எல்லைக்குள் நிற்கின்றார்கள். 

ஆகவே அவர்கள் ஒற்றை யாட்சி என்ற பதத்தில் தொங்கி பிடித்து நிற்பது சிங்கள பௌத்த அரசியல்வாதிகள்தான். தமிழர்களில் சிலர் இருக்கின்றார்கள். சமஷ்டி என்ற பெயர் புதிய அரசியலமைப்பில் வரா விடால் நிராகரித்து விடுவார்கள்.

அவர்கள் தீவிரமான போக்கை கொண்டவர்கள். அவர்களால்தான் தீர்வு குழம்பி விடும் என்றால், ஒற்றையாட்சி என்ற பதம் அரசியலமைப்பில் வரவேண்டும் என கோருவது தென்னிலங்கை அரசியல்வாதிகள்.

ஏனென்றால் சிங்கள பௌத்த கருத்தி யல் வகுத்து வைத்துள்ள எல்லைகளை தாண்டி வர அவர்கள் தயாரில்லை. 

இதனால் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட் டில் கூட ஒருவரையும் தொட  கூட விடமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால கூறியு ள்ளார். 

ஒரு பக்கம் நாங்கள் செய்கின்றோம் என கூறி வெளி நாடுகளுக்கு காட்டும் தரப்பு, இன்னொரு தரப்பு இந்த புதிய அரசாங்க த்தை காப்பாற்ற வேண்டும். ஆகவே அங்கு கூறுகின்ற எல்லாவற்றையும் இங்கு நாங்கள் செய்ய முடியாது என நினைக்கும் தரப்பு. 

இந்த கட்டத்தில் புதிய அரசியலமைப்பு முயற்சி ஒன்றை செய்து முடித்து விட்டோம் என வெளிநாடுகளுக்கு காட்டும் தேவை உள்ளது. இதனால் தான் புதிய அரசியலமை ப்பை ஒற்றையாட்சி என்றும் சொல்ல வேண்டாம். சமஷ்டி என்றும் சொல்ல வேண்டாம். 

உள்ளடக்கத்தில் என்ன உள்ளது என்று பார்ப்போம் என எமது தமிழரசியல் தலைமை கள் கூட கூறுகின்றனர். 

நாங்கள் போண் டாவை சாப்பிட்டு விட்டு வாய்ப்பன் என்று கூற முடியாது. அதேபோன்று வாய்ப்பனை சாப்பிட்டு விட்டு போண்டா என்று கூற முடியாது. 

ஒரு பண்டத்தை செய்து அதனை சிங்கள மக்களுக்கு ஒற்றையாட்சியாகவும், தமிழ் மக்களுக்கு இதில் சமஷ்டியின் கூறுகள் உள்ளன. படிப்படியாக அங்கு போகலாம் என கூறலாம். 

ஒரே பண்டத்தை இருவேறாக விற்கும் இராஜதந்திரத்தில் தான் எங்களது தமிழ் தலைமைகள் உள்ளன. லேபில்கள் முக்கிய மில்லை உள்ளடக்கத்தில் இருப்பதுதான் முக்கியம் என்றால், உள்ளடக்கத்தில் இருப் பதை ஏன் வெளிப்படையாக கூற முடியாது? லேபில் இல்லாமல் சிங்களத்தில் ஏக்கிய என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர் நீதிமன்றம் என்ன சொல்லும்? ஒற்றையாட்சியின் கருது கோளாக தான் எடு த்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது. இது எங்களுடைய வரலாறு. 

சமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்று இரண்டுமே இல்லாவிட்டாலும் அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் என் பது நாங்கள் அறிந்த வரலாறு. 

ஆகவே தான் உள்ளடக்கம் நல்லா இருந்தாலும் தலைப்பு அவசியம் என்று வலியுறுத்துகின்றோம். உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டுள்ளது என ஒரு தரப்பு பரப்புரை செய்து வருகின்றது. ஆனால் அந்த தீர்ப்பில் கடைசி பந்தி தான் நீதிபதியின் தீர்ப்பாக உள்ளது. 

இந்த வழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமை ப்பு சார்பில் தோன்றிய சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தில் தான் உள்ளக சுய நிர்ணயம் என கூறியுள்ளார்கள். 

இது கனடா உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளக சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக இல்லை என்பது அந்த தீர்ப்பை பார்த்தால் தெரியும்.

சமஷ்டி என்று வந் தாலும் உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சி கூறுகள் இருக்கலாம் எனவும் தீர்ப்பில் சொல்ல ப்பட்டுள்ளது. எனினும் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

இந்த தீர்ப்பை கவனமாக பார்த்தால் உள்ளக சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தவறான கருத்தாகும். 

இறுதியாக அரசியலமைப்பு ஆக்கத்தினை தங்களுடைய சர்வதேச உறவுகளில் ஏன் முக்கியத்துவப்படுத்துகின்றனர்? பொறுப்புக் கூறலை இல்லாமல் செய்வதற்கு. 

இரண்டாவது ஒற்றையாட்சி சமஷ்டி என்ற பதங்கள் இல்லாமல் வரக்கூடிய அரசியலமைப்பு கிட்டத் தட்ட 13ஆம் திருத்த சட்டத்தை ஒத்ததாக வரக்கூடிய இன்றைய அரசியலமைப்பு வெறு மனே ஒற்றையாட்சி என்ற பதத்தை கொண்டிருக்கா விட்டால் மாத்திரமே தமிழ் மக்க ளால் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்பது தொடர்பில் கவனமாக பதில் கூற வேண்டும். என தெரிவித்தார் குருபரன்.           
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila