வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்பை எந்தளவுக்கு மறைப்புச் செய்ய முடியுமோ அந்தளவுக்கு மறைப்புச் செய்யப்படுகின்றது.
இது எங்கள் நாடு. நாம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்ற மமதையில் இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்க ளுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக் கின்றனர்.
வன்னி யுத்தம் மட்டுமல்ல அதற்கு முன்பாக தமிழ் மக்களுக்கு நடந்த அத்தனை கொடுமைகளும் மறைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மறைப்புச் செய்வதை ஒரு பெரும் சாதனை என ஆட்சியாளர்கள் கருதலாம். ஆனால் இவற்றுக்காக என்றோ ஒரு நாள் இந்த ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் வருந்த வேண்டிவரும்.
இப்போதுகூட இடைக்கால வரைபை வெளி யிட்ட அரசு அதனை நிறைவேற்றுவதில் கடும் சவால்களைச் சந்தித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இடைக்கால வரைபு நாட் டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து என்பது போல கூறிவருகின்றன.
இதனை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள் ளும் மனநிலையிலேயே இருக்கின்றனர் எனில் நிலைமை எவ்வாறு உள்ளதென்பதை நாம் கூறி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையிராது.
உண்மையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்கள மக்களால் வலியுறுத்தப்பட வேண்டும்.
அதாவது இந்த நாட்டில் தொடர்ந்தும் இன வாதம் பேசிக்கொண்டு எங்கள் எதிர்காலத் தைப் பாழாக்க முடியாது.
இலங்கை என்ற இந்த நாட்டில் எல்லா இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழக் கூடியதான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் சிறு பான்மை என்பதால், அவர்கள் சகல உரிமை களுடனும் வாழக்கூடாது என நினைப்பது அடிப்படையிலேயே நீதியற்றதாகும் என்ற கருத்துக்களை சிங்கள மக்கள் முன்வைக் கும் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சுலபமாகிவிடும்.
இவ்வாறான ஒரு முடிவுக்கு சிங்கள மக் கள் வருவதற்கு தமிழ் மக்கள் சந்தித்த இழப்பு கள், வன்னிப் போரில் அவர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்கள்; வன்மங்கள் பற்றியயல்லாம் சிங்கள மக்கள் அறிய வேண்டும்.
சுருங்கக்கூறின் வன்னி யுத்தத்தில் பல்லா யிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக் கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதி கள் காணாமல் போயினர். தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன என்ற உண் மைச் செய்தியை எந்தவித திரிவுபடுத்தலு மின்றி சிங்கள மக்களுக்குக் கூறும் போது அவர்களிடம் ஒரு நியாயம் பிறக்கும். தாம் செய்வது தவறு என்ற நினைப்பு ஏற்படும்.
ஆனால் சிங்கள ஆட்சியாளர்களும் சிங் கள ஊடகங்களும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதியை மறைப்புச் செய்து பொய்ப் பிரசாரத்தை சிங்கள மக்களிடம் முன்வைக்கின்றனர்.
தமிழ் மக்கள் பொல்லாதவர்கள் போன்ற காட்சிப்படுத்தல் நடக்க அதற்குள் ஊறியவர் கள் தமிழ் மக்களை எதிராகவே பார்க்கின்ற னர். இதனால்தான் தீர்வு என்பதும் கலைகின் றது.