யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்திய சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஒன்பது நோயாளிக ளுக்கும் தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்திய மூர்த்தி, அவர்களுக்கு சிகிச்சையின் முடிவில் எவ்வாறான விளைவு ஏற்படும் என்பது தொட ர்பாக தெரியாது எனவும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நேற்றையதினம் யாழ்.போதனா வைத் தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தனியார் வைத்தியசாலையில் மேற்கொள் ளப்பட்ட கண்புரை சத்திர சிகிச்சையில் பாதிக்கப்பட்ட வர்கள் ஒன்பது பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில் அவர்களது தற் போதைய நிலை எவ்வாறுள்ளது என்பது தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பணிப்பாளர் பதிலளிக்கையில்,
ஒன்பது பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு நாம் சிகிச்சை வழங்கிவருகின்றோம்.
ஆனால் அவர்களுடைய கண்பார்வை சம்பந்தமாக எந்தவிதமான அறிக்கையும் இன்னமும் எமக்கு கிடைக்கப்பட வில்லை. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
சிகிச்சையின் முடிவில் அவர்களுக்கு என்ன விதமான விளைவு ஏற்படும் என்பது தொடர்பாக எனக்கு தெரியாது. அவர்கள் கடினமான கிருமித் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
அவர்களில் ஐந்து பேர் கொழும்பிற்கு அனுப்பட்டிருந்தார்கள். அதில் இருவர் மீண்டும் கொழும்பில் இருந்து தற்போது இங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை பாதிக்கப்பட்ட நோயாளிகள் இது தொடர்பாக தமக்கான பரிகாரத்தை எவ்வாறு தேடிக்கொள்ள முடியும்?
உண்மையில் இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கப்பட்டே ஆக வேண்டும். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எழுத்துமூலமாக அறிவிக்க வேண்டும்.
அதனை இத்தகைய தவறான சிகிச்சை முறை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். அல்லது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவே இலங்கையில் உள்ள சட்ட ரீதியான அணுகு முறையாகும்.
இவற்றைவிட தனியார் வைத்தியசாலையில் இடம்பெறுபவை தொடர்பாக அரசாங்கமே உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.