வடக்கு மாகாண சபையின் நேற் றைய அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மறுப்பு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 110 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் பல விடயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு தேநீர் இடைவேளை யின் பின்னர் அமர்வு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் போது உறுப் பினர் ஆனோல்ட் தற்போது மாவீரர் வாரம் என்பதால் அடுத்த அமர்வு எதிர் வரும் 5 ஆம் திகதி என்பதனாலும், இன்றைய அமர்வில் எமது மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ் சலி செய்வதற்கு அனு மதி வழங்குமாறு அவைத்தலைவரை கோரினார்.
எனினும் தற் போது தேவை யில்லை என மறுப்பு தெரி வித்த அவைத்தலை வர் உடனடியாக அவையை நிறைவுக்கு கொண்டுவந்தார்.
இதற்கு சபையில் இருந்த உறுப்பினர் கள் அனைவரும் மௌனமாக இருந்து வேடிக்கை பார்த்தனர்.
இதேவேளை வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால் மாகாண சபையின் அம ர்வு அல்லாத பிறிதொரு நாளில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
மாகாண சபையின் அமர்வில் அஞ்சலி செலுத்தினால் தெற்கில் உள்ளவர்கள் கொந் தளித்து விடுவார்கள் என்பதாலேயே மாகாண சபையின் அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட வில்லை என உறுப்பினர் ஒருவர் ஊடக ங்களிடம் தெரிவித்துள்ளார்.