அரச தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சி நேற்று (27.12.2017) புதன்கிழமை இரவு 10 மணிக்கு “அதிர்வு” நேரலை அரசியல் விவாத நிகழ்வுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை அழைத்திருந்தது.
கொழும்பு அரச தொலைக்காட்சிஒன்றின் அரசியல் விவாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரச தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சி நேற்று (27.12.2017) புதன்கிழமை இரவு 10 மணிக்கு “அதிர்வு” நேரலை அரசியல் விவாத நிகழ்வுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை அழைத்திருந்தது.
குறித்த அரசியல் விவாத நிகழ்வில் இடைக்கால அறிக்கை மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்த விடயங்களை உள்ளடக்கியதாக விவாதம் இடம்பெற்றது.
குறித்த விவாத நிகழ்வில் பல சந்தர்ப்பங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்துக்களுடன் தான் உடன்படுவதாக குறிப்பிட்ட சுமந்திரன் சில இடங்களில் பதிலளிக்க முடியாமல் திணறியதையும் சில இடங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்து சமாளித்துக் கொண்டதையும் காண முடிந்தது.
இவ்விவாத நிகழ்வின் மூலம் அரசாங்கம் கொண்டுவரவிருக்கின்ற புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சி யாப்பே என்பதும் அதற்கு தமிழரசுக் கட்சி கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்குவதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.