தேசிய நத்தார் விழாவில் பங்கேற்க திருகோணமலை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேலின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருமலை கலாச்சார மண்டபத்திற்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரால் கவனயீா்ப்பு போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
|
திருமலை கலாச்சார மண்டபத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வேலையற்ற பட்டதாரிகளும் ஆதரவு வழங்கியிருந்தனர். இருந்தும் போராட்டத்தின் ஆரம்ப நேரங்களில் பொலீஸாரின் தலையிட்டில் போராட்டம் முடக்கப்பட்டிருந்தது. இதன் போது கவனயீா்ப்பு போராட்டத்தை நிறுத்துவதற்காக திருமலை மாவட்ட பொலீஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் போராட்டத்தை முன்னெடுக்கச் சென்ற கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பொலீஸார் தடைவிதித்தனர். அதனால் அப்பகுதியில் பதட்ட நிலை நிலவியதுடன் அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக திருகோணமலையில் போராட்டம்!
Related Post:
Add Comments