எமது காணிகளை விட்டு வெளியேறுங்கள்! பொது மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் படையினரின் பயன்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிடுத்து தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறு 346 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தமது பதிவுகளையும் மேற்கொண்டுள்ளன.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் அதிகளவான தனியார் காணிகள், அரச காணிகள் பொதுமக்களின் காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மட்டுவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் 6 குடும்பங்களினது குடியிருப்புக்காணிகள் இராணுவத்தினரது பயன்பாட்டிலும் மட்டுவில்நாடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 4 குடும்பங்களது காணிகள் பொலிசாரின் பயன்பாட்டிலும் உள்ளன.
அத்துடன் இரணைதீவு கிராம அலுவலர் பிரிவில் உள்ள இரணைதீவு பகுதியில் 336 குடும்பங்களினது காணிகள் வீடுகள் என்பனவும் கடற்படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் குறித்த காணிகள் வீடுகள் இவ்வாறு படையினரின் பயன்பாட்டில் இருந்து வருவதனால் இதன் உரிமையாளர்களான தாங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதாகவும் இதனை விடுவித்து தருமாறுகோரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது பூநகரி மட்டுவில்;நாடு கிழக்கு பகுதியில் வைத்தியசாலை கமநலசேவை நிலையம் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் உள்ளடங்கிய வகையில் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளும் பொதுமக்களுக்குச் சொந்தமான 14 வரையான காணிகளையும் தொடர்ந்து இராணுவத்தினர் தமது பயன்பாட்டில் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமது காணிகளை விடுவித்து தங்களது காணிகளில் மீள்குடியேற அனுமதிக்குமாறு 6 குடும்பங்கள் தமது பதிவுகளை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டுள்ளன.
இதேபோன்று மட்டுவில்நாடு மேற்குப்பகுதியில் பொலிஸ்நிலையம் பொலிசார் விடுதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் என்பன இயங்கி வரும் காணிகளை விடுவிடுத்து அதில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறு 4 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளன.
இதேவேளை கடற்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட தங்களது பூர்வீக நிலமான இரணைதீவில் சென்று வாழ்வதற்கும் அங்கு தொழில் செய்வதற்கும் 336 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் தமதுசொந்தநிலத்தை விடுவிக்க கோரி கடந்த எட்டுமாதங்களாக போராடி வருகின்றனர்.
இவ்வாறு பூநகரி பிரதேசத்தில் உள்ள தங்களது பூர்வீக நிலங்களில் குடியேறி வாழ்வதற்கான உரிமைகளை நல்லாட்சி அரசு வழங்கவேண்டும் என இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பூநகரி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தினது காணி பல்லவராயன்கட்டு தென்னந்தோட்டக்காணி மரமுந்திரிகைத்தோட்டம் என்பவற்றையும் விடுவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila