மதிப்புக்குரிய கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர் களுக்கு அன்பு வணக்கம். தாங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன்.
எரிதணலாய் வெந்த மனதுக்கு குளிர்ந்த நீராய் அது இருந்தது.
இது நமக்கு மட்டுமல்ல. இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கும் ஆறுதல் கொடுத்தது. அதற்காகத் தங்களுக்கு முதற்கண் நன்றி கூறிக் கொள்கின்றோம்.
இன்று நம்மிடம் இருக்கக்கூடிய பெரும் பஞ்சம் துணிந்து பேசுவதற்கு ஆளில்லாமைதான். எந்த அநியாயம் நடந்தாலும் ஒன்றில் மெளனமாக இருப்பது அல்லது அநியாயத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தப்பிப்பிழைப்பது என்பதே எமது இன்றைய நிலைமையாயிற்று.
எதிர்க்காமல் - கருத்துரைக்காமல் - ஏசினால் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து விட்டு போகின்றவர்களுக்கு வாழத் தெரிந்த வர்கள் என்று நாம் பட்டம் வழங்குகின்ற கால சூழ்நிலையில், அரசியல் தலைமைகள் எப்படி யும் நடந்து கொள்ள முடியும் என்ற துர்ப்பாக் கிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது.
இத்தகைய சூழ்நிலை விடுதலைப் புலி களின் காலத்திலும் இருந்தது என்பதை ஏற் றுத்தானாக வேண்டும்.
விடுதலைப் புலிகளின் தலைமை சில இடங் களில் தவறுவிட்டபோது அதைச் சுட்டிக்காட்டு வதற்கு நம் புத்திஜீவிகள் முன்வரவில்லை. விமர்சித்தால், ஆலோசனை கூறினால் புலி கள் சுட்டுவிடுவார்கள் என்ற பயம்தான் தவறு களைச் சுட்டிக்காட்ட முடியாமைக்குக் காரணம் என்று கூறுவோரும் உளர்.
எனினும் உண்மை அதுவன்று. விமர்சிப்ப வர்களை, சரியான கருத்துக்களை முன்வைப்ப வர்களை விடுதலைப் புலிகளிடம் போட்டுக் கொடுக்கின்றவர்கள் அதிகமாக இருந்ததால் தான் துணிந்து கருத்துரைக்க வல்லவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
இவை முடிந்த கதை. முடிந்ததை மீளவும் கூறுவது கால மினக்கேடு என்பதால், அதனை தவிர்க்க சமகால சூழ்நிலை பற்றி நோக்குவதே பொருத்துடையது.
அந்த வகையில் தாங்கள் கூறியதுபோல தமிழ் அரசியல் தலைமையில் இருக்கக்கூடிய சர்வாதிகாரப் போக்கு எல்லை கடந்து விட்டது.
தமிழ் மக்களுக்கான அரசியல் என்பது மாறி இப்போது ஒரு சிலரின் சொந்த இலாபத்துக் கான அரசியல் என்பதாக நிலைமை மாறிவிட்டது.
இந்த இடத்தில் தாங்கள் துணிந்துரைத்த கருத்துக்கள் தமிழ் மக்களிடையே ஓர் உத் வேகத்தைத் தந்துள்ளது.
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ என்று சோழ மன்னனைப் பார்த்து கம்பன் கேட்டது போல தாங்கள் எழுதிய கட்டுரையின் கனதி இருந்தது கண்டு புளகாங்கிதம் கொள் ளாமல் இருக்க முடியாது.
அதேவேளை அரசியல் தலைவர்களின் குற்றங்களை துணிந்து உரைத்த தாங்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்குச் சரியான வர்களை அடையாளம் காட்டவும் முன்வர வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.
நம்மைப் பொறுத்தவரை இன்றைய சூழ லில் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தலை வர் என்றால் அது வடக்கின் முதலமைச்சர் நீதி யரசர் விக்னேஸ்வரனாக மட்டுமே இருக்க முடியும்.
அரசியல் என்ற சமுத்திரத்தில் அவரின் பய ணம் புதியதாக இருந்தாலும் அவரிடம் இருக் கக்கூடிய நேர்மையும் நீதியும் ஆத்ம பலமும் பயணத்துக்கு நிச்சயம் வழிகாட்டும் என்பதால், ஒரு புதிய அரசியல் பரிணாமத்தை அனைத்து தமிழ் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு உருவாக்க வேண்டும். இதுவே எல்லாவற்றுக் கும் பொருத்தமான நடவடிக்கையாகும்.
இது விடயத்தில் தங்களின் துணிச்சல் மிகுந்த-தகுதிவாய்ந்த கருத்துக்களும் அறை கூவல்களும் நிச்சயம் தமிழ் மக்களின் அபி லாசைகளை வென்றெடுக்கக்கூடிய அரசியல் தலைமையை உருவாக்கும் என்பதால், அதற்கு உங்கள் வகிபங்கை வழங்க முன்வாருங்கள்.