மீண்டும் திறக்கப்படும் மனித உரிமை கோவைகள்!

med1
மீண்டும் தேர்தல் களம் திறக்கப்படுகின்ற நிலையில் ஊடக சுதந்திரம் பற்றி தெற்கு வாய்திறக்க தொடங்கியுள்ளது.

இலங்கை மீண்டும் பத்திரிகையாளர்களிற்கு ஆபத்தான நாடாக மாறுவதை அனுமதிக்க கூடாது என ஊடகதுறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான கருத்துச்சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி தொடர்பான யுனெஸ்கோவின் பிராந்திய மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த நிகழ்விற்காக கொழும்பு தேர்ந்தெடுக்கப்பட்டமை பல காரணங்களிற்காக முக்கியமானதாக விளங்குகின்றது.
சில வருடங்களிற்கு முன்னர் எங்கள் நாடு பத்திரிகையாளர்களை பொறுத்தவரை மிகவும் ஆபத்தானதாக விளங்கியது என்பதை ஏற்றுக்கொள்வதற்கும் நினைவில் கொள்வதற்குமான தருணம் இது. எங்கள் கடந்த காலங்களை நினைவுகூர்ந்து இலங்கை மீண்டும் பத்திரிகையாளர்களிற்கு ஆபத்தான நாடாக மாறுவதை மீண்டும் அனுமதிப்பதில்லை என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவேண்டிய தருணம் இது.
கருத்துச்சுதந்திரத்திற்கு அவசியமான பாதுகாப்பான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ள அதேவேளை இந்த சூழலை காப்பாற்றுவதற்காக நீடிக்கச்செய்வதற்கான நாங்கள் தொடர்ந்தும் பாடுபடவேண்டும் என்பதை அங்கீகரிப்பதற்கான தருணம் இது. jaffnajour
அதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் கொலைகள் உட்பட பல குற்றச்செயல்களை விசாரணை செய்வதில் நாங்கள் இன்னமும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது என்பதையும் அங்கீகரிப்பதற்கான தருணம் இது.
குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற மிகமோசமான குற்றங்கள் மீண்டும் இடம்பெறுவதற்கு வழிவகுத்துவிடும் என்பதால் நீதி வழங்கப்படுவது முக்கியமான மிகவும் அவசியமானது என்பதை நாங்கள் அங்கீகரிப்பதற்கான தருணம் இது.
media2
மௌனமாக்கப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களின் நினைவாகவும் சுதந்திர சுயாதீன நீதிக்கான ஊடகங்களின் முக்கியத்துவததிற்காகவும் நாட்டில் சமாதானம் அபிவிருத்தி நல்லாட்சி என்பவற்றை ஏற்படுத்துவதற்காகவும் எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிக்கவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த தினம் இன்றைய நாளென அவர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி தமிழ் ஊடகவியலாளர்கள் போராடிவருகின்றனர்.ஆனால் அதற்கு இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.ஆகக்குறைந்தது மூன்று தமிழ் ஊடகவியலாளர்கள் விசாரணைகளையாவது முன்னெடுக்க கோரப்பட்ட போதும் கண்டுகொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தற்போது யுனெஸ்கோ மற்றும் தெற்காசிய ஊடக அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் முகவர்கள் ஊடாக ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பது தொடர்பான நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே அரசின் சர்வதேசத்தை ஏமாற்றும் இந்நாடகத்தை அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்.ஊடக அமையம் நிராகரித்திருப்பதாக தெரியவருகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila