பிரபாகரன் கல்வி கற்ற பாடசாலையை மூட உத்தரவு

விடுதலைப் புலிகளின் தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கல்வி கற்றதாக கூறப்படும் அம் பாறை தமிழ் மகா வித்தியாலய த்தை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை நகருக்கு அண் மையில் விசாலமான காணி யில் 1956ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயமானது தற்போது பயில்வதற்கு தமிழ் மாணவர்கள் இல்லாத காரணத்தி னால் இப் பாடசாலையினை மூடிவிடுவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இப்பாடசாலையானது ஒரு ஆசிரியர் மற் றும் அதிபருடன் கற்றல் செயற்பாடுகள் இன்றி இயங்கி வருவதாகவும் இப்பாடசாலையின் கட்டடங்களில் இராணுவ இளைஞர் படை யின் அலுவலகம் மற்றும் டி.ஈ.ஓ ஆகிய அலு வலகங்கள் இயங்கி வருவதாகவும் தெரி விக்கப்படுகின்றது.

இந்நிலையில் அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் விமலசேன மத்தும ஆராச்சி யினால் இப்பாடசாலையின் நிலைமைகள் தொடர்பாக கிழக்கு மாகாண கல்விச் செய லாளர் திஸாநாயக்காவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இப்பாடசாலையை மூடிவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் கல்லோயா பள்ளத்தா க்கு அபிவிருத்திச் சபையில் பணியாற்றிய தமிழ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்று வந்ததுடன், அம்பாறையில் விடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் அரச உத்தியோகத்தராக கடமை யாற்றிய வேளை விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆரம்ப கல்வியைப் பயின்றமைக்கான ஆவணங் கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக் கள் 1980 ஆண்டுக் காலப்பகுதியில் இங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரண மாக அங்கிருந்து வெளியேறியதுடன் தமிழ் மாணவர்களும் கல்வி கற்க செல்லாத நிலை யில் இப்பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இன்றி இருந்து வெறுமனே இயங்கி வந்து ள்ளமை குறிப்பிடத்தக்கது.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila