ஒரு காட்டில் நரிகளும் முயல்களும் வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு நாளும் முயல்களைப் பிடித்து நரிகள் கொன்று தின்றன.
இதனால் முயல் இனம் தொடர்சியாக குறை யத் தொடங்கிற்று. இந்நிலைமை உணர்ந்த முயல் கூட்டத் தலைவன் தன் பரிவாரங்களை அழைத்து,
இனியும் நாம் இங்கு வாழ்வது புத்திசாலித் தனமல்ல. தொடர்ந்தும் இங்கு நாம் இருப் போமாயின் எங்கள் அத்தனை பேரையும் நரிகள் கொன்று புசித்து விடும்.
ஆகையால் இந்த இடத்தை விட்டு நாங்கள் வெளியேறுவோம் என்றது. தங்கள் தலைவன் கூறுவதில் நியாயம் இருப்பதை உணர்ந்த முயல்கள் தலைவன் சொற்படி வேறு இடத் துக்குச் செல்லத் தயாராகின.
முயல்கள் எடுத்த இந்தத் தீர்மானம் ஏதோ வொரு வகையில் நரிகளுக்குத் தெரிந்து விட்டது.
முயல்கள் காட்டைவிட்டு வெளியேறினால், தங்களுக்கு உணவு இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்த நரிகள் ஒன்றுகூடி அதுபற்றி ஆராய்ந்தன.
முயல்களின் வெளியேற்றத்தைத் தடுத்தாக வேண்டும். இதற்காக ஏதாவதொரு திட்டம் தீட்ட வேண்டும் என்ற ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
முயல்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்; எதிர்காலத்தில் ஒற்றுமையாக இருப்போம்; இதற்காக ஒரு மாநாட்டைக் கூட்டுவோம் என்று நரிக் கூட்டத் தலைவர் கூறிய கருத்தை நரிப் பரிவாரங்கள் ஏற்றுக்கொண்டன.
அவ்வாறு மாநாடு நடைபெறும்போது பாட் டுப்பாடும் நிகழ்ச்சி நடத்துவதாகவும் தான் பாடும்போது அதன்படி செயற்படுமாறும் நரிக் கூட்டத் தலைவன் பரிவாரங்களிடம் கூறி வைத்தான்.
முயல்களுடன் ஒற்றுமையாக இருக்கும் தகவலுடன் சில நரிகள் முயல் கூட்டத் தலை வனைச் சந்தித்தன.
நீங்கள் இந்தக் காட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை. நீங்கள் இங்கேயே இருக் கலாம். நாங்களும் நீங்களும் ஒற்றுமையாக இருப்போம்.
இதற்காக ஒரு மாநாட்டைக் கூட்டுவோம் என் றன அந்த நரிகள். நரிகள் அவ்வாறு கூறியதை முயல் கூட்டத் தலைவன் ஏற்றுக் கொண்டான்.
தன் பரிவாரங்களை அழைத்து, நரிகளு டன் மாநாடு நடக்கப்போவதைக் கூறியதுடன் மாநாடு நடத்தும் நரிகள் எங்களை பழிதீர்த்தும் விடலாம். எதற்கும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் முயல் கூட்டத் தலைவன் முன்னேற்பாடாகச் சொல்லி வைத்தான்.
தீர்மானிக்கப்பட்ட ஒரு நாளில் மாநாடு ஆரம் பமாகியது. நரிகளும் முயல்களும் கூடின.
இப்போது நாங்கள் பாட்டுப்பாடி வட்டமாக சுற்றி வருவோம் என நரிக்கூட்டத் தலைவன் சொல்ல பாட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
முதலில் நரிக்கூட்டத் தலைவன் பாடுகிறான்.
டமுக்கு டுமுக்கு ஆளுக் கொண்டமுக்கு
டமுக்கு டுமுக்கு ஆளுக் கொண்டமுக்கு
நரித் தலைவனின் பாட்டை கிரகித்துக் கொண்ட முயல் கூட்டத் தலைவன் பதிலுக்குத் தானும் பாடினான்.
வர வர நழுவு வர வர நழுவு
அருமையான இந்தக் கதையை உள்ளூ ராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவோருக் குச் சமர்ப்பணம் செய்கின்றோம்.