உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
ஊர் ஊராக நடைபெறும் இத்தேர்தல் பிர சாரத்தில் பலரும் களமிறங்கியுள்ளதை அவ தானிக்க முடிகின்றது.
பொதுவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலி லில் கட்சி என்பதற்கு அப்பால், தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யார் என்பதுதான் முதன்மை பெறும்.
என் ஊரவர், என் உறவினர், தெரிந்தவர், உதவி செய்யக்கூடியவர் என்பவற்றுக்கு முன் னுரிமை கொடுத்து அதன் வழி வாக்களிக் கின்ற நடைமுறையே மேலோங்கி இருக்கும்.
இவை ஒருபுறமிருக்க, தேர்தல் பிரசாரத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மக்களுக்கு உண் மையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் நம் தாழ்மையான கோரிக்கை.
ஏனெனில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் உண்மையைச் சொல்ல மறுத்ததால்தான் எங்கள் மக்கள் பேரிழப்பைச் சந்தித்திருந்தனர்.
குறிப்பாக, வன்னிப் பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது விடுத லைப் புலிப் போராளிகள் கொன்றொழிக்கப் பட்டதாகவே இலங்கை அரசின் பிரசாரம் இருந்தது.
இவ்வாறாக இலங்கை ஆட்சியாளர்கள் தமிழினம் என்ற ஒரே காரணத்துக்காக சர்வ தேசத்தின் மத்தியில் பொய்ப்புரைத்தது.
போருக்குப் பின்பும் காணாமல்போனவர் கள் தொடர்பில், உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில், படையினரிடம் சரண டைந்தவர்கள் தொடர்பில், முழுப்பொய்ப்புரைப்ப தைக் காணமுடியும்.
இலங்கை அரசாங்கம் உண்மையைச் சொல்லுமாக இருந்தால் இனப்பிரச்சினைக் கான தீர்வு என்பதும் போர்க்குற்ற விசாரணை என்பதும் மிகச் சுலபமாகிவிடும்.
ஆக, தமிழினத்துக்கு எதிராக இலங்கை ஆட்சியாளர்கள் பொய்ப்புரைப்பதன் காரண மாகவே இன்றுவரை தமிழினம் பெரும் துன் பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து வருகிறது.
அதேவேளை இதற்கு எதிராகத் தமிழ் மக் கள் போராட வேண்டியும் உள்ளது. இந்நிலை யில் நாமே நம் இனத்துக்கு பொய்ப்புரைப் போமாக இருந்தால், எங்கள் மக்களின் எதிர் காலம் என்பது சூனியமாகிவிடும்.
எனவே யார் எந்தக் கட்சியில் நின்று தேர்த லில் போட்டியிட்டாலும் பரவாயில்லை. எங்கள் மக்களிடம் பொய்யுரைக்காதீர்கள்.
உங்கள் கட்சி சார்ந்தவர்கள் தமிழினத் துக்கு எதிராகச் செயற்பட்டால், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் செய்வது தவறு என்பதை வெளிப்படையாகப் பேசுங்கள்.
மக்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண் டும் என்பதற்காக பிழையைச் சரி என்றும் அதர்மத்தைத் தர்மம் என்றும் வாதிட்டு விடா தீர்கள். பதவியும் பட்டமும் ஏன்? மனித வாழ் வும் சொற்ப காலத்துக்குரியவை.
உண்மையும் நேர்மையும் தர்மமுமே இந்த உலகில் நிலைத்து நிற்கக் கூடியவை.
ஆகையால், வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால், உண்மையைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்.மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள் ளுங்கள். இதுவே வேட்பாளர்களிடம் நாம் கேட்பது.