
மூதூர் பள்ளிக்குடியிருப்பு பகுதியில் த.தே.கூட்டமைப்பின்
தேர்தல் பிரச்சாரக்கூட்ட முடிவில் குழப்பம் ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரச்சாரக்கூட்ட முடிவில் குழப்பம் ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டதாகவும் மக்களை கேள்வி கேட்க அனுமதித்தால் நிலமை சிக்கலாகும் என தெரிந்துகொண்ட சம்பந்தன் தரப்பு கேள்வி கேட்க சந்தர்ப்பம் வழங்காமல் கூட்டத்தை முடிவுறுத்தியமையால் சிறிதுநேரம் குழப்பம் நிலவியது.
''வந்திங்கள் கூட்டம் நடத்தினிங்கள்'' மக்களின் குறைகளை கேட்டீர்களா? என சம்பந்தனிடம் நேரில் தெரிவித்ததோடு நாம் காலம் காலமாக தமிழரசு கட்சிக்கே வாக்களித்தோம் ஆனால் எந்த பயனும் கிடைக்காதமையால் சுயேட்சையாக இளைஞர்கள் தேர்தலில் இறங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தம் ஆதரவு கொடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.