வட பிராந்திய போக்குவரத்துச் சபை சார்ந்த தொழிற்சங்கங்கள் நேற்று புதுவருடத்தில் இருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம் பித்துள்ளன.
வவனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு எதிராகவே வேலைநிறுத்தப் போராட்டம் நடை பெறுவதாகக் கூறப்படுகிறது.
வட பிராந்திய போக்குவரத்துச் சபை சார்ந்த சாரதிகளும் நடத்துநர்களும் முன்வைக்கின்ற கோரிக்கைகள் தொடர்பில் சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அதேவேளை அரசியல் நோக்கத்துக்காக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவில்லை என்பதை வட பிராந்திய போக்குவரத்துச் சபை யின் அனைத்து சாரதிகளும் நடத்துநர்களும் அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களும் உறுதி செய்ய வேண்டும்.
ஏனெனில், அரசியல் சார்பு என்பது வேறு. உரிமை என்பது வேறு. இந்த நாட்டில் எவரும் எந்த அரசியல் கட்சி சார்ந்தும் தமது ஆதரவு களை வழங்குவது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது.
அதேநேரம் தாம் ஆதரவு தெரிவிக்கும் கட் சிக்காக தமது பதவியையோ அன்றி தொழிற் சங்க நடவடிக்கைகளையோ பயன்படுத்துவ தென்பதும் தர்மத்துக்கு முரணானது.
தான் சார்ந்த கட்சிக்கான ஆதரவு என்பது மற்றவர்களைப் பாதிப்பதாக அல்லது மற்றவர் களின் கட்சிச் சார்புக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
எனவே இது விடயத்தில் வட பிராந்திய போக்கு வரத்துச் சபையின் சாரதிகளும் நடத்துநர்க ளும் நடுநிலை நின்று முடிவெடுக்க வேண்டும்.
தவிர, வட பிராந்திய போக்குவரத்துச் சபை யின் சேவை என்பது மிகவும் மதிப்புக்குரியது. யுத்த காலசூழ்நிலைகளிலும் எமது சாரதிக ளும் நடத்துநர்களும் ஆற்றிய பணிகள் என் றும் நன்றிக்குரியவை. அதேபோன்று தனி யார் போக்குவரத்துச் சேவையையும் எவரும் மட்டம் தட்டிவிட முடியாது.
இரண்டு சேவைகளும் இடையிடையே முரண் பட்டுக் கொள்வது வேதனைக்குரியதாயினும் இணைந்த திட்டமிடல்களும் புரிந்துணர்வுக ளும் பொருத்தமான நடவடிக்கைகளும் இருந் தால், இரு தரப்பு சேவையும் சுமுகமாக நடை பெறுவதுடன் அதனால் பொதுமக்களும் மிகு ந்த நன்மையடைய முடியும்.
எனினும் வவுனியாவில் புதிதாக அமைக் கப்பட்ட பஸ் தரிப்பு நிலையம் தொடர்பில்
குறித்த இடத்தைத் தெரிவு செய்தது யார்?
அந்த இடத்தில் சேவையை நடத்துவத னால் ஏற்படும் சாதகபாதகங்கள் எவை?
புதிய பஸ் தரிப்பு நிலையத்தை அமைத்த போது இப்படியான வேலைநிறுத்தப்
போரா ட்டத்தை முன்னெடுக்காதது ஏன்?
வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தின் உரு வாக்கத்தில் பலரும்
சம்பந்தப்பட்டிருக்க, வடக்கின் முதலமைச்சரை மட்டும் மையப் படுத்தி; உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத் தில் இப்படியான பணிப்புறக்கணிப்புப் போராட் டத்தை முன்னெடுப்பதன் உள்நோக்கம் என்ன?
என்பன குறித்து நியாயம் உரைக்கவல்ல - துணிச்சல்மிக்க நம் சாரதிகளும் நடத்துநர் களும் தமக்குள் கேள்வி எழுப்ப வேண்டும்.