வருகின்ற 24/02/2018 அன்று லண்டனில் மாவீரர்களின் குருதியில் சிவந்து தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமும், அனைத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவினைகளைப் பொருட்படுத்தாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் ஒன்றிணைக்கின்றதுமான தமிழீழ தேசியக் கொடியினை புலம் பெயர் தேசங்களில் தடைசெய்யக் கோரி சிங்களவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றார்கள்.
எனவே அதற்கு அனைத்து தமிழ் மக்களும் எதிர்வினை ஆற்றும் முகமாக தத்தம் சமூக வலைதளங்களில் தமிழீழத் தேசியக் கொடியின் படத்தினை முகப்பு படமாக அனைவரும் வைத்திருக்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள். அனைத்து தமிழர்களும் ஒரேமாதிரியான முகப்பு படம் வைத்திருப்பதால் எமது நாட்டின் தேசிய அடையாளம் தமிழீழத் தேசியக் கொடிதான் என்பதையும் நாம் அனைவரும் ஒரே நேரத்தில் வலுவாக பறைசாற்ற முடியும்.
நன்றி,
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
க. றாம்,
தமிழ் இளையோர் அமைப்பு பெல்சியம்,